சம்மாந்துறை கல்வி பணிமனையில் ஐக்கிய நவராத்திரி விழா!காரைதீவு சகா-
ம்மாந்துறை வலய கல்விப் பணிமனையின் வருடாந்த ஐக்கிய நவராத்திரி விழா வலய கணக்காளர் எஸ். திருப்பிரகாசம் தலைமையில் நேற்றுமுன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
வலய கல்வி பணிமனையில் கடமையாற்றும் இந்து ,இஸ்லாமிய, கிறிஸ்தவ உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்திய ஐக்கிய நவராத்திரி விழாவில், பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். எம்.எம். அமீர் கலந்து சிறப்பித்தார் .

வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவசிறி
நிர்மலேஸ்வரக் குருக்கள் வாணி பூஜையை நடத்தினார்.

ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் ,வீரமுனை ஆர். கே. எம். மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் மேடையேறின.
வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்திய இந்த விழாவில், பிரதி கல்விப் பணிப்பாளரும், நாவிதன்வெளி கோட்ட கல்வி பணிப்பாளருமான திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார் சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஆசிரியர் ஆலோசகர்களான கே. ரத்னேஸ்வரனின் ஏற்பாட்டில் திருமதி இ. ராஜேஸ்வரனின் வழிநடத்தலில் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பணிப்பாளர் வேதசகா ஆன்மீக நூல்களை பரிசாக வழங்கினார்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :