ஏறாவூர் நகர சபை கௌரவ தவிசாளர் #MS_நழிம் அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் செய்யத் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று நியூசிலாந்தின் தெற்காசிய பிராந்தியத்தின் சிறப்புத் தூதுவர் பிரட் சீல்ட் (Brett shelild) மற்றும் அவரது பாரியாரும் இன்று ஏறாவூர் நகரசபைக்கு வருகை தந்தனர்.
இவ்விசேட கலந்துரையாடல் ஏறாவூர் நகர சபா மண்டபத்தில் கௌரவ தவிசாளர் #MS_நழிம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அல்ஹாஜ் செய்யத் அலிஸாஹிர் மௌலானா (முன்னாள் இராஜாங்க அமைச்சர்), ஏறாவூர் நகரசபையின் கௌரவ பிரதி தவிசாளர் ASM றியாழ், கௌரவ உறுப்பினர்களான S சுதாகராசா, SM. ஜப்பார், MS அப்துல் கபூர், UL சுலைஹா, MHM ஹமீம் (ஏறாவூர் நகரசபை செயலாளர்) , ALM முனீர் (சட்டத்தரணி, செயலாளர் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்), RM சந்தன (ஏறாவூர் பொலிஸ் நிலைய உபபரிசோதகர்), ACM சயிட் (ஓய்வு பெற்ற அதிபர்), MMA சக்கூர் அதிபர் (மட்/மம/டாக்டர் அஹமட் பரீட் வித்தியாலயம்), சமூல நலன் விரும்பிகள், நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சிறப்புத் தூதுவர் Mr brett sheild அவர்கள் நியூஸிலாந்தில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பு, கல்வி, சுற்றுலா, போன்ற விடயங்களை தெளிவுபடுத்தினார்.
சட்டரீதியற்ற முறையில் நியூஸிலாந்திற்கு பயணிப்பவர்களுக்கு எவ்வித அனுமதியும் இல்லை என்பதையும், அவ்வாறு செல்பவர்கள் மிகவும் அசௌகரியங்களை அனுபவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு சிறப்புத் தூதுவர் Mr brett sheild அவர்களிடம்
1- சிறுவர் பூங்கா புணரமைப்பு
2- திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு புணரமைப்பு
3- தொழில் முயற்சியை ஊக்கு வித்து சியூசிலாந்தில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக
மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அத்தோடு கௌரவ தவிசாளர் அவர்களினால் வருகை தந்த Mr Brett sheild அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment