அம்பாறை மாவட்டத்தில் இனநல்லிணக்கத்தை வலுப்படுத்தியவர் மறைந்த டாக்டர் ஜெமீல்!சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் அம்பாறைக்கிளை அனுதாபம்!
காரைதீவு சகா-
லங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கும்,அம்பாறை மாவட்ட இனநல்லிணக்கத்திற்கும் பலவருடங்களாக சீரிய பணியாற்றிவந்த எமது அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீலின் மறைவு பாரிய வெற்றிடத்தைத்தோற்றுவித்துள்ளது. அன்னார் ஆத்மாசாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு சமாதானத்திற்கான சமயயங்களின் இலங்கைப்பேரவையின்(SLCRP) அம்பாறைமாவட்டக்கிளையும், அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனமும் (IRFAD)இணைந்து அனுதாபச்செய்தியை வெளியிட்டுள்ளன.

அமைப்புகளின் சார்பில் அதன் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா(ADE) விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது.

டாக்டர் ஜமீல் அவர்கள் பல்லின சமூகம் வாழும் எமது பிராந்தியத்தில் ஒரு சமாதான விரும்பியாக செயற்பட்டவர். அதனால் தான் அவர்சமாதானத்திற்கான சமயயங்களின் இலங்கைப்பேரவையின் அம்பாறைமாவட்டக்கிளையினதும், அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனத்தினதும் தலைவராக இருந்து செயற்பட்டவர்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவராக இருந்து பல்வேறு மதம்சார் முன்னேற்றமான செயற்பாடுகளை மேற்கொண்டவர்.அதைவேளை ஏனைய மதங்களை மதித்தவர். சாய்ந்தமருது வரலாற்று நூலை வெளியிடுவதில் முன்னின்று செயற்பட்டவர்.

அத்தோடு சுனாமிக்குப் பின்னரான மீள் கட்டுமான பணிகளை திட்டமிடுவதில் முன்னின்று செயற்பட்டவர்.

தனது வைத்தியத் துறையில் மக்கள் மத்தியில் சிறப்பான வைத்திய சேவையை மேற்கொண்டவர்.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் ஆரம்பம் முதல் தனது இறுதிக்காலம் வரை அக்கறையுடன் செயற்பட்டவர்.

சாய்நதமருது பிரதேசத்தில் சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தை உருவாக்கி அதன் தலைவராக இருந்து செயல்பட்டதோடு ஓய்வு நிலை ஊழியர்களின் முதுமை சம்பந்தமாக அக்கறையுடன் செயற்பட்டவர்.

சமாதானத்திற்காக நீண்டகாலம் பணியாற்றிய அவர் பழகுவதற்கு இனிமையானவர்.நல்லகுணம் படைத்த கல்விமான்.அடக்கமானவர்.மும்மொழி தேர்ச்சி பெற்றவர்.

எமது சங்க நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். சங்கத்தின் ஆணிவேராகத்திகழ்ந்தவர்.சர்வதேசநாடுகளுடன் தொடர்புள்ளவர். குறிப்பாக நாம் சிறுபான்மையினர் தேசிய அமர்வுக்கு செல்லும்போது அம்பாறை மாவட்டக்கிளையை அனைவரும் எப்போதும் புகழ்ந்துபேச வைத்த பெருமை டாக்டர் ஜெமீலையே சாரும்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ,திருகோணமலை, பேருவளை ,தர்காநகர் உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு சென்று சமயத்தலைவர்களை சந்திப்பதற்கு எமது குழுவின் மீகாமனாக இருந்து தலைமைத்துவம் வழங்கியவர்.

இறுதியாக கதிர்காமத்தில் நடந்த எமதுவருடாந்தபொதுக்கூட்டத்தில் தனதுவேலைப்பழு உடல் நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து ஒதுங்குவதாகத் தெரிவித்தபோது எவரும் அதில் உடன்படவில்லை. அந்தளவிற்கு பலரது மனங்களிலும் அவர் நீங்காத இடத்தைப்பிடித்திருந்தார்.
அப்படிப்பட்ட பண்புள்ள ஒரு தலைவரை இனிநாம் காண்போமா என்பது சந்தேகமே.
இறுதியாக அவரது சுயசரிதையை தானே எழுதி ஊரின் வரலாற்றையும் இணைத்து காத்திரமான கனதியான தடங்களின் நினைவுகள் என்ற நூலை தனது இல்லத்தில் வெளியிட்டார்.

பெரியார்களை மதிக்காத சமூகத்தில் பெரியார்கள் உருவாக மாட்டார்கள் என்று தொடங்கிய ஆழமான அணிந்துரையை அந்நூலில் அவர் பதிவிட்டு இருந்தார்.
அந்த நூலை அவர் எளிமையாக அவரது வீட்டிலேயே வெளியிட்டார். எனது மதிப்புரையும் அங்கே இடம்பெற்றமையை பாக்கியமாக கருதுகின்றேன்.
என்றும் என்னை ஆழமாக நேசித்த ஒரு தூய கனவானை இழந்தது எனக்கும் பேரிழப்புதான்.
அன்னாரின் மறைவு இப்பிரதேச அனைத்து மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
இத்தருணத்தில் அம்பாறை மாவட்ட மூவினமக்கள்சார்பாகவும் எமது அமைப்புக்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :