மட்டு.மாவட்ட கலைமன்றங்களை புனரமைக்க நடவடிக்கை



எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
ளர்ந்து வரும் இன்றைய நவீன உலகில் ஓர் சமூகத்தின் கிராமியக் கலைகளை வளர்ப்பதற்கான செயற்பாடுகள் மங்கி வருவதாலும் எதிர்வரும் தலைமுறையினர் மத்தியில் எமது மூதாதையர் வழியில் வந்த கலைச்செயற்பாடுகள் அழிந்து வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவற்றை நிவர்த்தி செய்யுமுகமாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டு.மாவட்ட கலாசார திணைக்கள இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் இன்று 13.09.2022ம் திகதி செவ்வாய்க்கிழமை கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு ஏறாவூர் தொடக்கம் வாகரைப் பிரதேசங்களுக்கிடைப்பட்ட கலைமன்றங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், இதுவரை காலமும் பதிவு செய்யப்படாமல் காணப்படுகின்ற கலைமன்றங்களைப்பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

ஒவ்வொரு கலைமன்றங்களும் வினைத்திறனான கலை சார்ந்த செயற்பாடுகளை வழங்க வேண்டுமென்றும் மாவட்ட இணைப்பாளார் குறிப்பிட்டதோடு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மட்டக்களப்பு மாவட்டக் கலைமன்றங்களுக்கிடையிளான கலை நிகழ்வுகளையும் மாகாண திணைக்களம் நடாத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :