நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் மரநடுகை



எம்.என்.எம்.அப்ராஸ்,ஏ.எல்.எம்.ஷினாஸ்-
156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் கல்முனை பொலிஸ் நிலையம் மற்றும் பாடசாலை நிர்வாகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய மர நடுகை நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் வை.எல்.ஏ.பஷீர் தலைமையில் இன்று (09)நடைபெற்றது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஸீன் பக்கீர் வழிகாட்டலில் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக பிரதம அதிதியாக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.

கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட்,பொலிஸ் பரிசோதகர் ஜே.எம்.ஏ.திசாநாயக்க,பாடசாலையின் பிரதி அதிபர் சி.எம்.நஜிப் உட்பட பொலிஸ் அதிகாரிகள்,
பாடசாலை சமூகத்தினர் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் வாரம் பிரகடப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடுபூராகவும் நடைபெற்று வரும் நிலையில், கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :