ஐக்கிய நாடுகள் சபையின் 51 வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து நான்கு தமிழ் அரசியல்வாதிகள் நேற்று ஜெனீவா சென்றடைந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பைப் சேர்ந்த மாணவர் மீட்பு பேரவையின் தலைவரும் ,பிரபல சமூக செயற்பாட்டாளருமான செல்வராஜா கணேஷ் ,மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவன், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் ,வடமாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் நேற்று ஜெனீவா சென்றடைந்தார்கள்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து கலந்து கொள்ளும் சமூக செயற்பாட்டாளர் செல்வராஜா கணேஷ் தெரிவிக்கையில் ..
உலக நாடுகள் கலந்து கொள்கின்ற ஐக்கிய நாடு மனித உரிமை கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நாங்கள் அங்கிருந்து வந்திருக்கின்றோம்.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வந்த மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு ,அதற்கு சமாந்தரமாக இடம் பெற்ற படுகொலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அநீதி, பாரபட்சம்,புறக்கணிப்பு பற்றி நாங்கள் பல தடவைகள் கூறியிருந்தோம் . அதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், தமிழ் உணர்வாளர்களும் இந்த நியாயமான கோரிக்கையை ஏலவே முன்வைத்து நீதி கேட்டு இருந்தோம். இதுவரைக்கும் அந்த நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.
அதற்காக இம்முறை மனித உரிமை மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக நாளை அனைவரும் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
இலங்கை அரசுக்கு எதிராக அழுத்தத்தை அதாவது தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும், படுகொலைகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் ஒன்று கூடி ஒருமித்த குரலில் அங்கு தீர்மானம் எடுக்கவிருக்கின்றோம். .
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு எதிராக அரசினாலும் இனவாதிகளாலும் முன்னெடுக்கப்படும் சதிகள், கபட நாடகம் தொடர்பாக அம்பலத்திற்கு கொண்டு வந்து, காத்திரமான நியாயமான அழுத்தத்தை கொடுக்க விருக்கிறோம்.
உலக தமிழர்கள் ஒன்று கூடுகின்ற அந்த களத்தை இம்முறை மேலும் பல
மாக்கி எமது உரிமைகளை வென்றெடுக்க நாங்கள் இங்கு வருகை தந்திருக்கின்றோம். என்றார்.
உலக தமிழர்கள் ஒன்று கூடுகின்ற அந்த களத்தை இம்முறை மேலும் பல
மாக்கி எமது உரிமைகளை வென்றெடுக்க நாங்கள் இங்கு வருகை தந்திருக்கின்றோம். என்றார்.
0 comments :
Post a Comment