நிந்தவூர் ,அட்டப்பள்ளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ச மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கிரியைகளை சிறப்பாக நடாத்தினார்கள்.
ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்.
அதற்கு முன்னோடியாக ,சனி, ஞாயிறு தினங்களில் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வுஇடம் பெற்றது. காலை 10 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை இடம்பெற்றது.
திங்கட்கிழமை காலை 6 .54 மணி முதல் 7. 31 மணி வரை உள்ள சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம் பெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தற்போது மண்டல அபிஷேக பூசைகள் நடைபெறுகின்றன.

0 comments :
Post a Comment