பதினாறு வயதுக்குக் கீழ்பட்ட மாணவர்களுக்கான கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் கிண்ணியா அல் அக்ஸா தேசியப் பாடசாலை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதை முன்னிட்டு அணியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(16) நடைபெற்றது.
இக் கௌரவிப்பு நிகழ்வை கிண்ணியா வலயக் கல்வி அலுவகமும் அல் அக்ஸா தேசியப் பாடசாலையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
கல்லூரி அதிபர் ஏ.எம்.சலீம் தலைமையில் உடற் கல்வி இணைப்பாளர் எ.எல்.எம்.நபீல் ஆசிரியரின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எ.எச்.எம்.அக்மல்,ஆசிரிய ஆலோசகர் என்.அறபாத் ஆகியோருடன் கல்வி அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சகல போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அணித் தலைவர் கே.எம்.ஹாதிஹ் கௌரவிக்கப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக செயற்பட்ட என்.எம்.றிப்சின் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வுக்கான நிதி அனுசரனையை வெளிநாட்டில் வசிக்கும் தனவந்தர் எ.எம்.நாஜிர் வழங்கியிருந்தார்.
மாகாணங்களுக்கிடையிலான 34 பாடசாலை அணிகள் பங்கு கொண்டதில் இடம்பெற்ற ஐந்து சுற்றுப் போட்டியிலும் அல் அக்ஸா கல்லூரி வெற்றி பெற்றதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேசிய ரீதியான உதைப்பந்தாட்ட போட்டியிலும் பங்கேற்க உள்ளது.
0 comments :
Post a Comment