மருதமுனை அலிஸ் கலை,இலக்கி ஆய்வு மற்றும் ஊடக அமையத்தின் ஏற்பாட்டி மருதமுனை ஜெஸீமா முஜீப் எழதிய குறுக்கு வேலி கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு(18-09-2022; மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் )இராணுவ உத்தியோகத்தர் மர்ஹும் ஆதம்பாவா சலீம் நினைவரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.பிரதம அதிதியாக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,விவசாய வன விலங்கு மற்றும் வன வளங்கள் ஆலோசனை அமைச்சின் செயலாளர் எம்.எம்.நஸீர்,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி ஆகியோருடன் எழத்தாளர்கள்,கவிஞர்கள்,உள்ளீட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தர் ஏ.பி.எம்.நவாஸ் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்.குறுக்கு வேலி கவிதை நூல் பற்றி தென்கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.எம்.ஐயூப்,கல்முனை கல்வி வலய உதவிக் கல்விக் பணிப்பாளர்(தமிழ்)கலாநிதி சத்தார் எம்.பிர்தொளஸ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
இலக்கிய அதிதிகளாக காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் கவிஞரும் எழுத்தாளருமான எம்.எம்.நௌபல்,கவிஞர் சோலைக்கிளி,எழுத்தாளர் உமாவரதராஜன்,பாவேந்தல் பாலமுனை பாறூக் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்ச்சித் தொகுப்பையும்,ஊடக அனுசரணையையும், ஊடகவியலாளர்களான ஏ.எல்.எம்.சினாஸ்,றாஸிக் நபாயிஸ் ஆகியோர் வழங்கவுள்ளனர்.
0 comments :
Post a Comment