சினேக பூர்வ கிரிக்கெட் போட்டியில் கிண்ணத்தை கைப்பற்றிய பவர் பிளயர் அணி!எம்.என்.எம்.அப்ராஸ்,யூ.கே.காலித்தீன்-
சினேக பூர்வ ரி10 கிரிக்கெட் கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பவர் பிளாஸ்டர் 89/91 அணியை வீழ்த்தி பவர் பிளயர் அணி 79 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று சினேக பூர்வ T10 கிரிக்கட் கிண்ணத்தை பவர் பிளயர் 93/96 அணியினர் கைப்பற்றினர்.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபீர்,இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.ரஸ்மி ஆகியோர் கலந்து கொண்டு நிணைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பவர் பிளயர் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தேர்ந்தெடுத்தது.

அதன்படி,முதலில் துடுப்பெடுத்தாடிய பவர் பிளயர் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 06விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பவர் பிளயர் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் நசீர்கான் ஆட்டமிழக்காது 34ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

சிறந்த இணைப்பாட்டமாக நஸ்வி (20 ஓட்டங்களையும் )மற்றும் தாரிக் (20 ஓட்டங்களையும்) ஆகியோர் 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து அணிக்கு வழுவூட்டினர்.

பந்து வீச்சில் ஐயூப்கான் மற்றும் சக்கூர் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

ஜிப்ரி மற்றும் இஸ்ஸடீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக் கொண்டனர்.
அதன்படி, 113 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பவர் விளாஸ்டர் அணி 07 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 35 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அப்துல் மஜீட் அதிகபட்சமாக 15 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அஜ்மல், ஜௌஸி மற்றும் கடாபி ஆகியோர் தலா 02 விக்கட்டுக்களையும், சிராஜ், தாரிக் மற்றும் நசீர்கான் ஆக்யோர் தலா 01 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக தாரிக் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :