தோட்டப்புற வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
முனீரா அபூபக்கர்-
தோட்டப்புற வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தோட்டப்புற வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன (S.J.B) 
நல்லாட்சி அரசாங்கம் தோட்ட மக்களுக்காக 7 பேர்ச்சஸ் காணியை வழங்கியது. கடந்த காலத்தில் அந்த உரிமம் மீளப் பெறப்பட்டு மீண்டும் புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தோட்ட மக்களின் வாழ்க்கை லயன் அறைக்குள் அடைக்கப்பட்டு சுமார் 200 வருடங்கள் ஆகிவிட்டது. அதில் அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. தோட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நீண்ட கால கடன் வழங்க முடியுமா? அல்லது நிலத்தின் பத்திரத்தை வழங்க முடியுமா?

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க -

இதற்கான பதிவேடுகள் தோட்டங்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அந்த ஆவணத்தைப் பெற்ற பிறகு அவர்களுக்கு இந்திய உதவி அல்லது வீடு கட்ட அரசு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எங்களால் வீடுகளை முழுமையாகக் கட்ட முடியாது. ஆனால், கிடைக்கும் ஒதுக்கீட்டின்படி வீடுகள் கட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.

மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன (S.J.B) 

அரச தோட்டக் கம்பனிகளின் லயன் அறைகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தோட்டத்தில் வேலை செய்வதில்லை. தோட்டத்தில் வேலை செய்தால் மட்டுமே இந்த வீடுகள் கட்டப்படும். இந்த தோட்டப்புற வீடுகள் வாழ்வதற்கு 1ஏற்றதாக இல்லை. எனவே இம்மக்களுக்கு அரசால் கைவிடப்பட்ட காணியில் வீடு கட்டுவதற்கு நீண்டகாலக் கடன் வழங்க முடியுமா?

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (S.J.B) 

தோட்ட வீடுகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. பயிரிடப்படாத ஏழு பேர்ச் காணியை உரிமம் வழங்கும் முறையின் கீழ் வழங்கினால் அது தோட்ட மக்களுக்கு பெரும் நிம்மதியாக அமையும். நிலம் கிடைத்தால் சொந்த செலவில் வீடு கட்டி முடிப்பார்கள். அதற்கு அரசாங்கமும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உதவ முடியும்.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 

நிதி திருத்தச் சட்டத்தை முன்வைக்கும் போது இவர்கள் அனைவருக்கும் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தும் அதற்காக நாங்கள் முயற்சி எடுத்துள்ளோம். உங்கள் ஆலோசனைகள் அடுத்த ஆலோசனைக் குழுவிற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :