அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தை தம்பிநாயகபுரம் ஸ்ரீ குளத்தடிப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஏழு முப்பது மணியளவில் இடம்பெற இருக்கின்றது.
அதற்கான கிரியைகள் யாவும் இன்று ஏழாம் தேதி புதன்கிழமை ஆரம்பமாக இருக்கின்றது. நாளை எட்டாம் தேதி வியாழக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற இருக்கின்றது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ புண்ய கிருஷ்ணகுமாரக்
குருக்கள் தலைமையில் நடைபெறுகிறது .
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல அபிஷேக பூசைகள் பத்தாம் தேதி முதல் தொடர்ச்சியாக இடம் பெறும்.
இறுதியில் 21 ஆம் திகதி சங்காபிஷேகம் இடம் பெற இருக்கின்றது.
கும்பாபிஷேகத்துக்கான பாற்குட பவனி 21 ஆம் தேதி காலை திருவள்ளுவர்புரம் மகாவிஷ்ணு ஆலயத்தில் இருந்து பவனிவர இருக்கின்றது என ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment