நேர்மறையாக சிந்திக்கும் இளைஞர்களை உருவாக்கும் வேலைத்திட்டம்; முதற்கட்டம் அம்பாறை மாவட்டத்தில்..!



நூருல் ஹுதா உமர்-
ஐ.ஆர்.ஓ. ஸ்ரீலங்கா அமைப்பு நாடளாவிய ரீதியில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இவ் அமைப்பின் மற்றுமொரு செயற்திட்டமாக "நேர்மறையாக சிந்திக்கும் இளைஞர்கள்" எனும் தலைப்பிலான புதிய செயற்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் பல இளைஞர் யுவதிகள் பங்கு பற்றிய முழுநாள் பயிற்சி பட்டறை வியாழக்கிழமை காரைதீவு தனியார் மண்டபத்தில் அமைப்பின் நிறைவேற்றுத்தலைவர் எ.றொஸான் முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.

சமூக மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (ISD) நிறைவேற்று பணிப்பாளர் பி.முத்துலிங்கம் அவர்களின் வழிகாட்டலிலும் அவ் அமைப்பின் அனுசரணையுடனும் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்பீட் அமைப்பின் சமூக மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.ஐ.றியால், சமூக மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல், ஐ.ஆர்.ஓ. ஸ்ரீலங்கா அமைப்பின் நிறைவேற்று சபை உறுப்பினர் எ.எம்.ஸாக்கீர் அஹமட் உள்ளிட்ட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் இவ் ஒருநாள் பயிற்சி பட்டறையின் வளவாளராக உளவியல் ஆலோசகர் மனுஷ் அபூபக்கர் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார். இவ் நிகழ்வில் அதிகளவான இளைஞர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

"இளைஞர்கள் நேர்மறை சிந்தனையாளர்கள்" திட்டத்தில் இளைஞர்கள் எப்படி நேர்மறையாக சிந்திக்கிறார்கள், எதிர்மறை சிந்தனைக்கும் நேர்மறையான சிந்தனைக்கும் என்ன வித்தியாசம், சமூகத்திற்குள் நேர்மறையாக சிந்திப்பதால் எவ்வாறான நன்மைகள் கிடைக்கின்றன, நேர்மறையான சிந்தனைமிக்க இளைஞர்களின் வெற்றிகரமான எதிர்கால வாழ்க்கை என்ன என்பது உள்ளிட்ட பல விடயங்கள் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான பயிற்சி பட்டறைகள் ஏனைய மாவட்டங்களிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாக ஐ.ஆர்.ஓ. ஸ்ரீலங்கா அமைப்பின் நிறைவேற்று தலைவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :