பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் மாதிரி உணவகம் திறப்பும், மரநடுகையும் ஊழியர்கள் கௌரவிப்பும்.



நூருள் ஹுதா உமர்-
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நோயாளிகளுக்கும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் தரமான சுகாதாரமான மலிவான தொற்றா நோயை தவிர்க்கும் விதமான உணவகம் இன்று (22) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டீ. ஜீ. மலின்டன் கொஷ்டா மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது

பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ. ஆர்.எஸ்.டீ. ரஜாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மரநடுகையும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பி. அப்துல் வாஜித் மற்றும் பணிமனையின் பிரிவுத்தலைவர்கள் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் அபிவிருத்திக் குழுவினர் உள்ளிட்ட பெருந்திரளான பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :