இயற்கை சூழலின் பசுமையைப் பேணும் வகையில் இறக்காமம் மஜீட் வாவியை சூழ மரநடும் நிகழ்வு இறக்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த சேனாரட்ன தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு மரநடுகை வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் பொலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி எம்.வை. ஜௌபர், கமநல சேவை பொறுப்பதிகாரி சுஜித் இறக்காமம் பிரதேச செயலக சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், தொழிலதிபர் ஏ.மர்சூக், விவசாய விரிவாக்கல் பொறுப்பதிகாரி எம்.ஐ.அஸ்ஹர், விவசாய போதனா ஆசிரியர் ஏ.எல்.பஹ்மி அஹமட், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இர்பான் ஆகியோரின் வழிநடாத்தலில்
பொது கள விஜயம் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.
0 comments :
Post a Comment