இணைந்த கரங்கள் அமைப்பினால் புளியம்பத்தை முன்பள்ளி பாடசாலை திறப்பு !!நூருள் ஹுதா உமர்-
புளியம்பத்தை மகாசக்தி முன்பள்ளி பாடசாலை திறப்பு விழா கலைவாணி கனிஷ்ட வித்தியாலய அதிபர் ஆ.நல்லதம்பி தலைமையில் மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், மற்றும் பாடசாலை பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்விற்கு முக்கிய அதிதிகளாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை. ஜெயசந்திரன், ஆலையடி வேம்பு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.கருணாகரன், ஆலையடி வேம்பு பிரதேச சபை தவிசாளர் டீ. கினோஜன், ஆயுர்வேத வைத்திய அதிகாரி பாத்திமா ஆமிலா ஜமால்டீன், கால்நடை வைத்திய அதிகாரி திருமதி.டீ. கோகுலதாஸ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் பாத்திமா கரீமா, மாதர் சங்க உறுப்பினர்கள் அப்பிரதேச ஆலய தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான தினேஸ்ராஜ், ஜனபாலசந்திரன் குடும்பத்தினரும், கனகராஜ் நடராஜமணி குடும்பங்களின் நிதிப்பங்களிப்பில் இப்பாடசாலைக்கு தேவையான பொருட்களை வழங்கி இருந்தனர்.

அத்துடன் அதிக கஷ்ட புளியம்பத்தைக் கிராமத்தில் இயங்கி வருகின்ற திகோ/ கலைவாணி வித்யாலயத்தில் கல்வி பயில்கின்ற 15 மாணவர்களுக்கும் மற்றும் அதே கிராமத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் இன்று திறந்து வைக்கப்பட்ட மகாசக்தி பாலர் பாடசாலையில் கல்வி பயில இருக்கின்ற 15 மாணவர்களுக்குமென மொத்தமாக 30 மாணவர்களுக்கு பாடசாலை நேரங்களில் சத்துணவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் புவனேஷ் ராஜா அவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பானது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக இணைப்பாளர் லோகநாதன் கஜரூபன் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தனதுரையில், இப் பாடசாலைக்கு பெயர் பலகை திறந்து வைத்தலும் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் எமது இணைந்த கரங்களில் பயணிக்கும் புதுப்பொலிவான பெயர்ப்பலகை செய்து திறந்து வைத்தமை இப் பாடசாலையின் சமூகத்தினையும் மாணவச் செல்வங்களையும் மகிழ்வுட்டும் நிகழ்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது என்றார்.

மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை இணைந்த கரங்கள் ஊடாக இணைப்பாளர்களான லோ. கஜரூபன், எஸ். காந்தன், திருவாணன், மற்றும் இணைந்த கரங்கள் ஆதரவாளர்களான செல்வநாயகம், லக்ஸ்மிகாந் ஆகியோரினால் வழங்கி வைத்ததுடன் இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆசிரியர்களுக்கான ஒரு மாத கொடுப்பணவும் முன்பள்ளி ஆசியரிடம் வலயக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :