காலம்சென்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்களின் பூதவுடல் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் இறுதி அஞ்சலிக்காக இன்று ஞாயிறு (18-09-2022) காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை மாநகர சபையின் சபா மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இரங்கல் உரைகளும் நிகழ்த்தப்படவுள்ளன.
இந்நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களையும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று மாநகர சபையில் நேற்று சனிக்கிழமை மாலை, மாநகர முதல்வர் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment