மாவடி பேர்ல்ஸ் பிரிமியர் லீக் பாகம் 3 : சாம்பியனானது பேர்ல்ஸ் ஸ்ட்ரைக்கஸ் !நூருல் ஹுதா உமர்-
மாவடிப்பள்ளி மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "பேர்ல்ஸ் பிரிமியர் லீக் பாகம் 3" க்கான போட்டியில் பேர்ல்ஸ் வாரியஸ் அணியை வீழ்த்தி பேர்ல்ஸ் ஸ்ட்ரைக்கஸ் அணி வெற்றி பெற்று பேர்ல்ஸ் பிரிமியர் லீக் 3ம் பாகத்தின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பேர்ல்ஸ் பைட்டர்ஸ், பேர்ல்ஸ ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பேர்ல்ஸ் வாரியர்ஸ் ஆகிய 3 அணிகள் "பேர்ல்ஸ் பிரிமியர் லீக் பாகம் 3" க்கான போட்டியில்பங்குபற்றின. இதில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பெற்ற பேர்ல்ஸ ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் பேர்ல்ஸ் வாரியர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியிக்கு தகுதி பெற்றது.

வியாழக்கிழமை மாவடிப்பள்ளி அஸ்ரப் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பேர்ல்ஸ் வாரியஸ் அணியை வீழ்த்தி பேர்ல்ஸ் ஸ்ட்ரைக்கஸ் அணி வெற்றி பெற்று பேர்ல்ஸ் பிரிமியர் லீக் 3ம் பாகத்தின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு 30,000 ரூபாய் பணபரிசும் வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இரண்டாவது இடத்தைப் பெற்ற பேர்ல்ஸ வாரியர்ஸ் அணிக்கு 20000 ரூபாய் பணபரிசும் வழங்கப்பட்டது.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பேர்ல்ஸ் ஸ்ட்ரைக்கஸ் வீரர் பாஹிம் தெரிவு செய்யப்பட்டதுடன் இச்சுற்றுப் போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற அம்ஜாத் (பேர்ல்ஸ் ஸ்ரைக்கர்ஸ்), அதிக விக்கெட்டுகள் பெற்ற வீரர் சுஜாத் (பேர்ல்ஸ் ஸ்ரைக்கஸ்), ஆகியோர் வெற்றி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :