சுய கற்றல் வள நிலைய அங்குரார்ப்பண நிகழ்வு 2022



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்/மம/ஏறாவூர் றஹ்மானியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) சுய கற்றல் வள நிலைய அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பாடசாலையின் அதிபர் DM உவைஸ் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஜனாப் MS.நழீம் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு

கௌரவ அதிதிகளாக MAC றமீஸா SLAS (உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி), JF றிப்கா SLEAS (பிரதிக் கல்விப் பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம் மட்டக்களப்பு மத்தி), ஜனாப் MHM றமீஸ் SLEAS (பிரதிக் கல்விப் பணிப்பாளர் மட்டக்களப்பு மத்தி), A முபாஸ்தீன் SLEAS (உதவிக் கல்விப் பணிப்பாளர் மட்டக்களப்பு மத்தி), MHM ஹமீம் SUPRA (செயலாளர் ஏறாவூர் நகரசபை), ASM றியாழ் ( பிரதி தவிசாளர் ஏறாவூர் நகரசபை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் விசேட அதிதிகளாக UL றசீட் ( உறுப்பினர் ஏறாவூர் நகரசபை), SM ஜப்பார் ( உறுப்பினர் ஏறாவூர் நகரசபை), AM சப்றா ( உறுப்பினர் ஏறாவூர் நகரசபை), அதிதிகளாக. ஜனாப் VTM ஜனூன் (பிரதி அதிபர் மட்/மம/றஹ்மானியா மகா வித்தியாலயம்), ALM சில்மி (பிரதி அதிபர் மட்/மம/றஹ்மானியா மகா வித்தியாலயம்), மட்/மம/றஹ்மானியா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் மற்றும் ஜனாப் MM அபூபக்கர் (தலைவர் RDS ஏறாவூர் 1B), ஜனாப் SL தாலிபீன் (தலைவர் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் ஏறாவூர்), MI மஹ்றூப் (HMM TRADERS உரிமையாளர், AC சபீக் (ACS உரிமையாளர்), ஜனாப் VT றிபாய்தீன் (அப்துல் றஹ்மான் பவுண்டேசன்), MA அப்துல் றசாக், SA றசாக், MS றியாழ், AM தாஸீம், NMG கபூர், ஜனாப் A சபீக், பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வருடம் பாடசாலையில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட செயற்திட்ட வகுப்புகளுடன் கூடியதாக மாணவர்களின் சுய கற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் இச் சுய கற்றல் வள நிலையம் அமையப்பெற்றுள்ளது. மாணவர்களின் மாலை நேரத்தினை பயனுள்ளதாக கழிக்க வகைசெய்யும் பொருட்டு மாலை 3.30 மணி தொடக்கம் 9 மணி வரை ஆசிரியர்களின் வழிகாட்டலில் மாணவர்கள் பாடசாலையில் சுயமாக கற்கும் வகையில் இவ் வள நிலையம் செயற்படும்.

இதற்காக மொத்தமாக 12 மின்குமிழ்கள் பாடசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
அத்தோடு அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தப் பெறு பேறுகளின் அடிப்படையில் இப்பாடசாலையில் கல்வி கற்று வைத்தியத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவிகளான JF. ஹிபா மற்றும் MSF.குபைரா பானு ஆகியோரை கௌரவிக்கும் முகமாக ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் MS.நழிம் அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும் பாடசாலையில் சிறப்பான கழிவகற்றல் திட்டத்தினை அறிமுகப்படுத்தி குப்பைத் தொட்டிகளற்ற தூய்மையான பாடசாலைச் சூழலை உருவாக்கி முன்மாதிரி பாடசாலையாக அடையாளம் காணப்பட்ட ஏறாவூர் றகுமானியா தேசிய பாடசாலைக்கு "கழிவுகளற்ற கனவான்கள் பாடசாலை" என்ற விருதும் ஏறாவூர் நகர சபையினால் இவ்வைபவத்தில் வழங்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :