நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகம் நடத்தும் ரீ 10 கிரிக்கட் சமரின் அரை இறுதிப் போட்டி அண்மையில் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை விளையாட்டு கழகத்திற்கும் கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை லெஜன்ஸ் விளையாட்டு கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய சம்மாந்துறை விளையாட்டு கழகம் 7.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 57 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இப்போட்டியில் கல்முனை லெஜன்ஸ் விளையாட்டு கழகம் 68 ஓட்டங்களினால் வெற்றி பெற்று நிந்தவூர் இம்ரான் விளையாட்டு கழகத்துடனான இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழக வீரர் முஹம்மட் முபாரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment