சூரிய சக்தி மின்சாரத்தினைப் பயன்படுத்தினால் year 3 பில்லியன் டொலரை சேமிக்க முடியும் . ஊடக மாநாடு

அஷ்ரப் ஏ சமத்-
சூரிய கூரைகள் - இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரே தீர்வு சூரிய பலசக்தியாகும். இலங்கை மின்சார சபை அண்மையில் மின்சார கட்டனத்தினை 75 வீதத்தினால்் அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை மின்சார சபை 239 வீத மின்சாரக் கட்டணத்தினை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. 75 வீதக் கட்டணத்தினால் 2022ல் மின்சார சபையின் இழப்பு 500 பில்லியன் ருபாவாக இருக்கும். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் இந் நிலை ஏற்பட்டுளள்து. ஆனால் தற்போதைய மின்சார நெருக்கடியை எதிா்கொள்ள ஒரே ஒரு தீர்வு சூரிய கூரைகள் திட்டமாகும். என சூரிய சக்தி மின்சாரத்தினை வழங்கும் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவா் லக்மால் பெர்ணான்டோ தெரிவித்தாா்.
சூரிய சக்தி மின்சார தொழிற்சாலைகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக மாநாடு ஆகஸ்ட் (25) மருதாணையில் உள்ள சாம்பா் ஒப் கொமா்சியல் கட்டிடத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டில் சூரிய சக்தி உற்பத்தியாளா்கள் பிரபாத், பராக்கிரம, குசான் ஆகியோறும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனா்.

அங்கு கருத்து லக்மால் பெர்ணான்டேர மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
சூரிய சக்தித் திட்டத்தினை இலங்கையில் அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுடன் அமுல்படுத்தினால் எரிபொருளுக்கு செலவு செய்யும் நிதியினை மிச்சப்படுத்த முடியும் அமேரிக்க டொலர் 36 பில்லியனை மீதப்படுத்த முடியும். வருடத்திற்கு 3 பில்லியனை சேமிக்க முடியும் வீட்டு ,உயா்ந்த கட்டிடங்கள், ஹோட்டல்களுக்குத் தேவையான மின்சாரத்தினை சூரிய மின்சக்தி மூலம் வழங்க முடியும். ஆனால் கூரைக்கான மின் சேகரிக்கும் கண்ணாடிகள் பெற்றரிகள், வயா்கள் அதிக விலை கூடியதானாலேயே ஆகக் குறைந்தது 11 இலட்சம் சாதாரண ஒரு வீட்டுக்குத் தேவைப்படுகின்றது. இவா்கள் சேமிக்கும் மின்சாரத்தினை இலங்கை மின்சார சபைக்கு விற்கமுடியும்.
அரசாங்கமும் மின்சக்தி அமைச்சரும் இத் திட்டத்திற்னை இலங்கையில் முன்னெடுப்பதற்கு வழி வகையிலையும் அதற்கான அனுமதியையும் எங்களுக்கு வழங்க வேண்டும். இம் முயற்சியில் உரிய கவனம் செலுத்தியிருந்தால் இன்றைய மின்வெட்டை இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுப்படுத்த்தியிருக்காலாம். மிகக் குறுகிய காலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். சாதாரணமாக ஒரு வீட்டின் கூரையின் மேல் சூரிய சக்திக்காக 11 இலட்சம் செலவாகும். 65 இலட்சம் மின் நுகர்வோரில் 20 சதவீதத்தினை சோலப் பவா் சிஸ்டம் மாத்தினால் மின்சாரம் வெட்டு எரிபொருள் விலை உயா்வு டொலா் ஏற்றம் ஆகிய வற்றிக்கு இத் திட்டம் நன்மை பயக்கும் தற்பொழுது நாட்டில் சூரிய சக்தி மின் பாவணையாளா்கள் 4இலட்சத்திற்கும் குறைவானவா்களே பாவிக்கின்றனா். அவா்களது மேலதிக மின்சாரத்தினை இல்ங்கை மின்சார சபையே அதனை கொள்முதல் செய்கின்றது. மேலும் 10 இலட்சம் பேரை சூரிய மின் சகத்தி மாற்றுவேர்களேயானால் நுகர்வோா் எண்ணிக்கை 3 கிலோவோட் சோலா் அமைப்பினை நிறுவமுடியும். தேசிய அமைப்பு 3000 மெகாவோட் திறன் கொண்டதாக அமையும் எனவும் தெரிவித்தாா்
2018ல் சூரிய சக்தித் திட்டத்தினால் 3பில்லியன் ருபாவை சேமிக்க முடிந்தது. டீசல் ஒர் லீட்டருக்காக 1.5 டொலரை செலவழிக்க வேண்டியுள்ளது. மின்சார பாவணைக்காக மட்டும் 6 வீத கடனை வெளிநாடுகளில் இருந்து இலங்கை பெறுகின்றது. சூரிய சக்தி மன்சாரத்தினை இலங்கை மின்சார சபை 5வீதத்திற்கு பெற்று 22 வீதத்திற்கு விற்பனை செய்கின்றது. இதனை வழங்கும் வாடிக்கையாளா்களுக்கு கடந்த 1 வருடமாக பெற்ற மின்சாரத்திற்கான கட்டனத்தினை செலுத்தவில்லை.

3 ஜிகவாட் மின்சாரத்தினை திறனைச் சோ்ப்பதன் மூலம் 3 ஆண்டுகளில் 3 பில்லியன் அமேரிக்க டொலர் அந்நியச் செலவாணியைச் சேமிக்க முடியும். சூரிய சக்தி அமைப்பு நெருக்கடிக்கு ஒர் தீர்வு
மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமேரிகக டொலரை சேமிக்க முடியும்.
புதைபடிவ எரிபொருட்களை விட விலை குறைவு
கணினி நிறுவல் இடங்கள் அடையாளலம் காணப்படுகின்றன
அரசாங்கத்திற்கு எந்த செலவும் இல்லை.
வெளிநாடுகளுக்கு அன்னியச் செலவாணி செல்வதைத் தடுக்கின்றது
விரைவாக நிறுவ முடியும். 1 நாள் முதல் 4 மாதங்களுக்குள்
தொழில்நுட்ப சாத்தியக் கூறு உறுதிபடுத்தப்பட்டுள்ளது
சூழல் மாசடைவதைக் தடுக்கின்றது
மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோக நெட்வோக்குகளுக்கான செலவைக் குறைக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :