
கர்ப்பகாலத்தை பொறுத்தவரை 3 வகையாக வகைப்படுத்தலாம்
1. ஏற்கனவே குருதியழுத்தநோய் உள்ள பெண் கர்ப்பமடையலாம் (Chronic Hypertension)
2 குருதியழுத்தநோய் இருப்பினும் அது முதற்தடவையாக கர்ப்பகாலத்தில் கண்டறியப்படலாம்
3. கர்ப்பகாலத்தில் மாத்திரம் உருவாகும் குருதியழுத்தம் ( Gestational Hypertension). இது 20 வாரத்திற்கு பின்னர் உருவாகும். பிரசவத்தின் பின் மீண்டும் அநேகமானவர்களில் குருதியழுத்தம் பழைய நிலையை அடையும்

1. குருதியழுத்தம் ஏற்படுவதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா ? சிறுநீரக , இதய நோய்களுடன் தொடர்புடையதா என்பதை கண்டறியப்பட வேண்டும்.
2. குருதியழுத்த மட்டத்தை சரியாக கட்டுப்படுத்திய பின்னரே கர்ப்பமடைய முயற்சிக்க வேண்டும்.
3. குருதியழுத்தத்தால் இதயம், சிறுநீரகம் அல்லது கண் போன்ற உடலுறுப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்துக்கொளவது சிறந்தது.
4. போலிக்கமிலம் Folic acid 1mg மாத்திரைகளை கர்ப்பமடைய 3 மாதத்திற்கு முன்னிருந்தே பாவிக்க தொடங்கியிருந்தால் சிறந்தது.
5. உடல் நிறை BMI சரியான மட்டத்தில். ( BMI < 25 )
கட்டுப்படுத்த வேண்டும்.
6. குருதியழுத்தத்திற்கு பயன்படுத்தும் சில மருந்துவகைகள் கர்ப்பகாலத்தில் பாவிக்க கூடாது. ( உதாரணம் Losartan) . எனவே ஏற்கனவே பாவிக்கும் மருந்துவகைகள் கர்ப்பகாலத்திற்கு உகந்த மருந்துகளாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது கர்ப்பமான பின்னர் அவற்றுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை ஏற்கனவே அறிந்திருத்தல் சிறந்தது.
Poorly controlled Hypertension குருதியழுத்ததை சரியாக கட்டுபடுத்தாமலிருப்பின் ஏற்படக் கூடிய விளைவுகள்
தாய்க்கு ஏற்படக்கூடிய விளைவுகள்


குழந்தைக்கு ஏற்படக்கூடிய விளைவுகள்
1. குழந்தையின் வளர்ச்சிக்குறைவு ஏற்படல் -Fetal Growth Restriction
2. குழந்தையின் நஞ்சுக்கொடி Placenta குழந்தை பிரசவிக்க முன்னர் பிரிவடைதல் - Placental Abruption
3. குழந்தையை சூழவுள்ள நீர்மட்டம் , இரத்த ஓட்டம் குறைவடைவதால் குறைமாதத்தில் குழந்தையை பிரசவிக்க வேண்டிய நிலைமை
4. சிலரில் குழந்தை வயிற்றினுள்ளேயே இறக்கும் நிலை
இவ்வாறு பல விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்
எனவே தகுந்த வைத்தியநிபுணரை நாடி Blood pressure மட்டத்தை சரிப்படுத்திய பின்னர் கர்ப்பமடைவது சிறந்தது.
Dr A C M Musthaq
MBBS MD MRCOG MSLCOG
Consultant obstetrician and gynaecologist
National Hospital Kandy
(above article is written in Tamil)
0 comments :
Post a Comment