அமைச்சு சூது எங்களுக்கு வேண்டாம்! குழுக்கள் முறைமையின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவோம்!!-சஜித் பிரேமதாஸ


நிலவும் சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன இணைந்து பொது பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், அது சர்வ கட்சி, ஒன்றிணைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் எனவும், இதில் எவ்விதமான அமைச்சுப் பதவிகளையும் பகிர்ந்து கொள்வது போன்ற எந்த வகையான டீல்களிலும் தாம் இணைய மாட்டோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (6) தெரிவித்தார்.

வழக்கமான கேவலமான அரசியல் கலாசாரத்தை மீண்டும் கொண்டு வந்து நாட்டின் 220 இலட்சம் மக்களை மீண்டும் துன்பத்திற்கு உள்ளாக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,

அதிகாரமளிக்கப்பட்ட நிறைவேற்று பாராளுமன்ற குழுக்கள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதோடு, அமைச்சு பதவிகளை பெற்று அதன் சுமையை மக்கள் மீது பாரப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், பாராளுமன்றத்தில் அதிகாரத்துடன் கூடிய குழுக்களின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களைப் போன்று நப்பாசையிலான அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள கவனம் செலுத்தாமல், எமது நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கான பொதுவான வேலைத்திட்டத்திற்கு ஆதரவை நல்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எடுத்த தவறான முடிவினால் ஒரு தோல்வியுற்ற ஆட்சியாளர் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார் எனவும், அவரது பலவீனமான ஆட்சியினால் முழு நாடும் அனாதரவாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தெரணியகல தேர்தல் தொகுதி அமைப்பாளர் ரஞ்சித் பொல்கம்பல அவர்களின் தொகுதிக்கூட்டம் இன்று (06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் அப்பகுதி ஏராளமான பிரதேச வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

தற்போது நாட்டில் 220 இலட்சம் பேர் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகவும், பிடிவாதமும்,ஆணவமும்,மனசாட்சி இல்லாத, செயல்பட முடியாத அரசொன்றின் செயல்களே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

2019 டிசம்பரில் நாடு இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு வர 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் எனவும், 2 மாதங்கள், 3 மாதங்களில் நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற கனவுக் கதைகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும் அவ்வாறு கூறுவது பொய்யானது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பொய்க்கு இடமளிக்கக் கூடாது எனவும், எமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :