ஆட்டோ பிரயாணத்துக்கான நியாயமான தொகை அறவிடுங்கள்எஸ்.எம்.எம்.முர்ஷித் -
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பயணிகளிடம் இருந்து அறவீடு செய்யும் பிரயாணத்துக்கான தொகை நியாயமானதாக வரையறுக்கப்பட வேண்டும் என ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஆட்டோ சாரதிகள் சங்கங்களினால் தற்கால எரிபொருள் பிர்சனைகள் தொடர்பில் ஓட்டமாவடி பஸ் தரிப்பு நிலைய கட்டடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு விசேட கூட்டம் நடைபெற்றது.

ஓட்டமாவடி முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.எல்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் உட்பட ஆட்டோ சாரதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது ஆட்டோ சாரதிகள் சங்கம் தற்போது எதிர்நோக்கும் எரிபொருள் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு பெயர் பலகை இடல், குறிப்பிட்ட காலத்திற்கு புதிய தரிப்பிட அனுமதி வழங்குவதில்லை, சங்கத்தின் கீழ் செயற்படும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பயணிகளிடம் இருந்து அறவீடு செய்யும் பிரயாணத்துக்கான தொகை நியாயமானதாக வரையறுக்கப்பட வேண்டும்.

தற்போது முச்சக்கர வண்டிகளுக்கு கியூஆர் (QR) குறி முறைப்படி ஐந்து லீற்றர் பெற்றோல்கள் வழங்கப்படுகின்றன. தொழில் நிமித்தம் ஈடுபடுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் போதுமானதாக இல்லை இவைகள் குறைந்த பட்சம் வாரத்திற்கு 10 லீற்றராக அதிகரிக்கப்பட வேண்டும் என ஆட்டோ சாரதிகள் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோரிடம் சிபார்சு பெற்று இதற்கான அனுமதியை பெற்றுத் தருவதாக சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளுர் சேவைக்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பஸ் சேவையை பாடசாலை சேவைக்கு மாத்திரம் பயன்படுத்துவது தொடர்பாகவும் அதனை இடைநிறுத்துவதா என்பது தொடர்பிலும் பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :