சென்னை, வடபழனியில்; ஏறாவூர் கவிஞரும் எழுத்தாளருமான செய்னுலாப்தீன் நஸீராவின் நூல்கள்ஏறாவூர் சாதிக் அகமட்-
சென்னை, வடபழனியில் கடந்த 05.06.2022 இல் கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம் இலக்கிய அமைப்பின் நிறுவுநர் கவிதாயினி ரித்து சூரியா அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட உலக சாதனை நூல் வெளியீட்டு மேடையில் உலகளாவிய 250 எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வுகள் இங்சொய்ட்(INKSOID), றாபா ( RAABA) ஆகிய உலக சாதனை அமைப்புகளின் பதிவேடுகளில் இடம் பெற்றுள்ளன.

இவ்வுலக சாதனை மேடையில் ஏறாவூர் கவிஞரும் எழுத்தாளருமான ஹாஜியானி செய்னுலாப்தீன் நஸீரா அவர்களின் "மகுடம் சூடும் மணிக்கூகள்" என்ற நூலும் "மண்ணில் தவழும் விண்மீன்கள்" எனும் உலகக் கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மேலும் பல இலங்கைக் கவிஞர்களின் நூல் வெளியீடுகளும் இடம்பெற்றன.

உலக சாதனை நூல் வெளியீட்டு நிகழ்வில் இடம்பெற்ற இலங்கைக் கவிஞர்கள் சிலரின் நூல்களை இலங்கையில் ஒரே மேடையில் மறு வெளியீடு செய்வதற்காக பண்டாரவளையைச் சேர்ந்த கவிஞர் பூனாகலை நித்தியஜோதி அவர்களின் முயற்சியினால் மூன்று நூல்களை வெளியிடும் நிகழ்வு இன்று பண்டாரவளை தமிழ்த் தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கவிஞர் நித்தியஜோதி அவர்களின் "ஈரவிழியில் மறையாத வீரம்" சிறு கதைத் தொகுதியும், ஹாஜியானி செய்னுலாப்தீன் நஸீரா அவர்களின் "மகுடம் சூடும் மணிக்கூகள்", "மண்ணில் தவழும் விண்மீன்கள்" ஆகிய இரண்டு நூல்களும் மறு வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக் கழக பொருளியல் துறைப் பேராசிரியர் திரு. சங்கரன் விஜயசந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
ஹாஜியானி செய்னுலாப்தீன் நஸீரா அவர்கள் இரண்டு நூல்களினதும் பிரதிகளை பிரதம அதிதி பேராசிரியர் திரு சங்கரன் விஜய சந்திரன் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
பிரதம அதிதி தனது உரையின்போது "வாசிப்புப் பழக்கம் அருகி வரும் தற்காலத்தில் வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு மூன்று வரிகள், நான்கு வரிகளில் அமையப் பெற்றுள்ள நஸீரா எஸ் ஆப்தீனின் கவிதைகள் மிகப் பொருத்தமானவை. மேலும் இலத்திரனியல் கலாசாரத்தில் மூழ்கியிருக்கும் தற்கால சமூக அமைப்பில் எமது படைப்புக்களை இலத்திரனியல் மயப்படுத்துவதால் அவை உலக மக்களை இலகுவாக சென்றடையக் கூடியதாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
ஹாஜியானி செய்னுலாப்தீன் நஸீரா அவர்களின் இரண்டு நூல்களுக்குமான நூலாய்வு விமர்சனத்தினை ஏரூர்க் கவிமகன் ஜனாப் எஸ்.எம்.அமீனுத்தீன் அவர்கள் நிகழ்த்தினார்.

நிகழ்வின்போது ஏனைய அதிதிகளுக்கும் நூல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :