ஆஷூறா தின கர்பலா நினைவாக பரிசுத்த அஹ்லுல்பைத் மணாகிப் மஜ்லிஸ் !நூருல் ஹுதா உமர்-
புனித ஆஷூறாஃ தினத்தில் கர்பலாஃ நினைவாக பரிசுத்த அஹ்லுல்பைத் மணாகிப் நிகழ்வு கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் தாறுஸ்ஸபா தலைமையகத்தில் (ஹிஜ்ரி 1444 முஹர்ரம் 10) இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.

தாறுஸ்ஸபா அமையத்தின் தலைவர் மௌலவி ஏ.ஆர். சபா முஹம்மட் (நஜாஹி) தலைமையில் உலமாக்கள், மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு ஆஷூறாஃ தினத்தின் சிறப்புக்கள் மற்றும் கர்பலாஃ நினைவான பரிசுத்த அஹ்லுல்பைத் மணாகிப் மஜ்லிஸை நடத்தினர். இதன்போது இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகள் தொடர்பிலான சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ், பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னசனலின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் செரீப், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், கிழக்கின் கேடயம் அமைப்பின் பொதுச்செயலாளரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா, கல்முனையான்ஸ் போரம் செயற்பாட்டாளர் எம்.எச். முபாரிஸ், பொது அமைப்புகள் பலவற்றினது முக்கிய நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், கல்முனை தாறுஸ்ஸபா அமைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :