பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்காரைதீவு சகா-
ம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள காயத்ரி கிராமம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப தலைவிகளுக்கு அரிசி வினியோகம் நடைபெற்றது.

பிரபல சமூக செயற்பாட்டாளரும் காரைதீவுப் பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையிலே இந்த விநியோகம் நேற்று இடம் பெற்றது.
கனடாவில் இருந்து நேரடியாக வருகைதந்த சமூக சேவையாளர் மதி அண்ணரின் நிதியுதவியில் அவரை அதனை வழங்கி வைத்தார்.

இதன்போது சமூக செயற்பாட்டாளர்களான வி.ரி. சகாதேவராஜா, கே புண்ணியநேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

சமகால பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் கஷ்டப்படும் விதவை குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி வினியோகம் வரப்பிரசாதமாக அமைந்தது என்று விநாயகபுரம்சமூக செயற்பாட்டாளர் நந்தபாலு நன்றி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :