அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் காரைதீவு மாணவன் துவாரகேஷ் முதலிடம்! கிழக்கில் முதற்தடவையாக வரலாற்று சாதனை!!



காரைதீவு சகா-
க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் காரைதீவைச் சேர்ந்த தமிழ்வண்ணன் துவாரகேஷ் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் .

கிழக்கின் வரலாற்றில் இது முதற் தடவையாக ஏற்படுத்திய அகில இலங்கை சாதனையாகும்.
தோல்வைத்திய நிபுணர் டாக்டர் தமிழ்வண்ணன் வைத்திய அதிகாரி பகீரதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வன் துவாரகேஷ் ஆவார்.

பெற்றோர் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றுவதால் தற்சமயம் அவர்கள் மட்டக்களப்பில் வாழ்ந்து வருகின்றார்கள்.
கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்து மருத்துவத் துறையில் முதலிடம் பெற்ற துவாரகேஸ் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மண்ணைச் சேர்ந்தவராவார்.

சாதனை நிகழ்த்திய மாணவனை பலரும் பாராட்டி பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்ட பிரபலங்கள் வீடுதேடி சென்று பாராட்டி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :