சாய்ந்தமருது மக்களை மீண்டும் குழப்பாதீர்கள் ! சலீமின் அறிக்கைக்கு யஹியாகான் பதில்!!" இறைவன் உதவியுடன் சாய்ந்தமருது நகர சபை மலர்வது உறுதி " - என்ற முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல. சலீம் விடுத்துள்ள அறிககை , சாய்ந்தமருது மக்களை மீண்டும் ஏமாற்ற எடுக்கப்பட்ட முயற்சியாகவே பார்க்க முடிகின்றது.

இவ்வாறு - முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் விடுத்துள்ள பதில் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் - அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நண்பர் சலீமின் அறிக்கையை அவதானித்தபோது அழுவதா ? சிரிப்பதா ? என்றே தோன்றுகின்றது.

சாய்ந்தமருது மக்களை மீண்டும் - நகர சபை கோஷத்தை முன்வைத்து குழப்பும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் எந்தவொரு விடடுக்கொடுபபுக்கும இடமில்லை. அதில், நானும் எங்கள் கட்சியும் தலைமைத்துவமும் உறுதியாக இருக்கிறோம்.

ஆனால், கல்முனையை அழித்து ஒழித்து விட்டு சாய்ந்தமருது நகர சபை மலர்க் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.

நான் அறிந்த வகையில், அமைச்சு மட்டத்தில் - சாய்ந்தமருது நகர சபை தொடர்பான எந்தவொரு நகர்வும் இடமபெறறதாக தெரியவில்லை. அவ்வாறு நடைபெறுமாக இருந்தால் அதனை பகிரங்கமாக ஆதாரத்துடன் மக்கள் முன் சம்ர்ப்பிக்க வேண்டும். அதைவிடுத்து மாயாஜால கருத்துக்களை கூறி ஏமாற்ற முயலக் கூடாது.சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி வெளிவந்தால் மட்டுமே உண்மை. அதற்கும் நீங்களோ அல்லது தேசிய காங்கிரஸ் தலைவரோ உரிமை கோர முடியாது.

சாய்ந்தமருது மக்களே மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் இருங்கள். இவ்வாறான போலி பிரச்சாரங்கள் - பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி விடாதீர்கள். இது ஏதோ ஒரு காரணத்துக்காக எம்மை ஏமாற்ற எடுக்கப்படும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.

கருஜயசூரியவுடனான சந்திப்பில் நானும் நீங்களும் பங்குபற்றினோம்.ரவூப் ஹக்கீமை சந்திக்க முடியாமல் நீங்கள் இருந்த போது - தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தது நான்.

முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சாய்ந்தமருது நகர சபை விடயம் தொடர்பாக சந்திக்க - விமான நிலையம் சென்று கொண்டிருந்த பைசால் காசீம் எம்பியை திருப்பி அழைப்பித்து பாராளுமன்றத்தில் சந்திப்பை மேற்கொண்டமை என அனைத்தையும் இப்போது நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை.

எனவே - தயவு செய்து, சாய்ந்தமருது மக்களை இன்னும் இன்னும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.. மக்களே , நீங்களும் ஏமாறாதீர்கள் என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :