பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் பிரதேச மட்ட இனங்களுக்கிடையிலான சகவாழ்வை கட்டியெழுப்பும் நிகழ்வு !



நூருல் ஹுதா உமர்-
கிராம மட்டத்தில் சவாழ்வை உறுதிப்படுத்துவற்கான அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய சகவாழ்வு அமர்வுகள், கலாச்சார நிகழ்வுகள், விஷேட தின கொண்டாட்டங்கள், சிரமதானங்கள், சமயங்களுடனான கருத்துப்பரிமாறல்கள் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை இந்நிகழ்ச்சிகளில் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் இறக்காமம் பிரதேசத்திற்கான பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களுடனான சகவாழ்வு அமர்வு இறக்கமாம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

பெண்கள் வெளிக்கள உத்தியோகத்தர் ஆர்.எஸ். றிஸ்மியா ஜஹான், அமைப்பின் பிரதேச ஒருங்கினைப்பாளர் எஸ்.டீ. நஜீமியா ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளான திட்ட இணைப்பாளர் நடராஜா சுமதி மற்றும் உதவித் திட்ட இணைப்பாளர் செல்பவதி கங்கேஷ்வரி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன், மேலும் இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். மூவின மக்களுக்கிடையில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :