நில அகழ்வுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் கூட்டம்கடந்த 18ஆம் திகதி சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சி்ல் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் ரூபசிங்க, புவியியல் சேவை மற்றும் நில அகழ்வுப் பணியகத் தலைவர் செனரத் ஹேவகே மற்றும் பொறியியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சஜ்ஜியாடன சில்வா, புவியியல் சேவை மற்றும் நில அகழ்வுப் பணியகப் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான Dr. சரத் ஒபேசேகர மற்றும் எம்.பெரோஸ் ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கந்துகொண்டனர்.
கனியவளங்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்ட இக்கூட்டத்தில்,இதற்குத் தடையாக உள்ள நில அகழ்வுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்தத்துறையில் ஈடுபாடு கொண்ட சுமார் 57 முதலீட்டாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கனிய வளம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை கைத்தொழில் பிரதேசங்களாக அறிவிப்பதற்கும், இத்துறையில் முதலீடுவோரை உள்வாங்க அவர்களுக்கு சலுகைகள் வழங்குவது பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் ஆண்டில், இந்தத்துறை சார்ந்த தொழில்களை வளர்த்தெடுக்கும் வகையில் இருநூறு கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன்போது சுட்டிக்காட்டினர். அடுத்த ஆண்டுக்குள், கனிய வளங்கள் ஏற்றுமதிகளால் முன்னூறு மில்லியன் டொலரை வருமானம் பெறுவதை இலக்காகக் கொண்டு தனது அமைச்சு பணியாற்றுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இன்னும், இத்துறையின் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த முதலீட்டாளர்களின் அனுமதிப் பத்திரங்களிலுள்ள தடைகளை நீக்கவும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் புதுத்திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இடையில் இருபது நிறுவனங்களிடம் அது தொடர்பிலான முன் அனுமதியை இதுவரை காலமும் பெற்றுவந்த முதலீட்டாளர்களின் சிரமங்கள் கருதி அவற்றை சுற்றாடல் அமைச்சு பொறுப்பேற்று, அதனை மேற்கொண்ட பின்னர் முதலீட்டாளர்களுக்கு அமைச்சினால் இறுதியாக அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தேவைப்படும் அன்னியச் செலாவணிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, கனியவள ஏற்றுமதியை ஊக்குவிக்க உள்ள வழிகள் பற்றியும் ஆராய்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எனினும்,அகழ்வுத்தொழில்களின் போது, சூழல் மாசடையாமல் இருப்பதற்கான பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் அதிகாரிகளிடம் அமைச்சர், எடுத்துரைத்தார்.
0 comments :
Post a Comment