சிரேஸ்ட ஊடகவியலாளா் இக்பால் அலி எழுதிய இளம் தலைமைத்துவ ஆளுமையும் - வை.எம்.எம். ஏ தேசியத் தலைவா் சஹிட் எம். றிஸ்மியுடனான நேர்காணல் கட்டுரைகள் அடங்கிய நுால் வெளியீட்டு நிகழ்வு


அஷ்ரப் ஏ சமத்-
சிரேஸ்ட ஊடகவியலாளா் இக்பால் அலி எழுதிய இளம் தலைமைத்துவ ஆளுமையும் - வை.எம்.எம். ஏ தேசியத் தலைவா் சஹிட் எம். றிஸ்மியுடனான நேர்காணல் கட்டுரைகள் அடங்கிய நுால் வெளியிடும் ஊடகவியலாளா்கள் ,கல்வியலாளா்கள் கௌரவிப்பு நிகழ்வும் கொள்ளுப்பிட்டி மந்தரினா ஹோட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நேற்று 28ஆம் திகதி தலைமையில் நடைபெற்றது

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா் ரமீஸ் அபுபக்கா் கலந்து கொண்டாா். ஆசிரியுரையை தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியா் ரி.செந்தில்வேலவா், வாழ்த்துறையை ரவுப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவா், சிரேஸ்ட ஊடகவியலாளா் என்.எம். அமீன், அல்ஹாஜ் எம்.எம். பீர்முஹம்மத் தலைவா் மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கிய பேரவை, நுால் அறிமுகவுரையை - லண்டனிலிருந்து இர்பான் இக்பால், நுால் ஆய்வுரையை முன்னாள் புனா்வாழ்பு புனரமைப்பு திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் ஏ.எம். நஹியா, நுால் மதிப்பீட்டுரையை கவிஞா் நா. நித்தியானந்தன், முன்னாள் விரிவுரையாளா் அரசியல் விஞ்ஞானத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம், நுால் வெளியீட்டுரையை அசீஸ் மன்றத்தின் செயலளா் எம்.எஸ்.ரஹீம், ஏற்புரையை சஹட் எம்.றிஸ்வி, நுாலாசிரியா் இக்பால் அலி நுால்பற்றிய உரையையையும் இங்கு உரையாற்றினாா்கள். இந் நுால் வை.எம்.எம்.ஏ இயக்கத்தின் ஸ்தாபகர் காலம்சென்ற கலாநிதி ஏ.எம். ஏ அஸீஸ் அவா்களுக்கு சமாப்பணம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுாலின் முதற்பிரதியை கலாநிதி ஏ.எம். அசீஸ் அவா்களின் புதல்வா் அலி அசீஸ் பெற்றுக் கொண்டாா்.

இந் நிகழ்வில் துரைசாா்ந்தவா்கள் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளா்களும் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா் ரமீஸ் அபுபக்கா், பேராசிரியா் பீ.எம். ஜமாஹிர், பன்முக ஆளுமை கொண்ட ஊடகவியலாளா் இர்பான் இக்பால்,பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி எம்.இசட் எம். நபீல், கொழும்பு பல்கலைககழகத்தின் சட்த்துறை சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி சாமிலா தாவுத், தென்கிழக்கு பேராசிரியை எம்.ஜ.சபீனா இம்தியாஸ், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் முகாமைத்துவ பேராசிரியா் எம்.எஸ்.எம். அஸ்லம், பொலிஸ் திணைக்களத்தின் சுற்றுலா காவல்த்துறை பணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி, எம்.ஏ.எம். நவாஸ், பட்டயக்கணக்காளா் றியாஸ் ஜப்பாா், வளவாளா் பட்டய்க கணக்காளா் பாசிர் மொஹிடீன், ஆகியோர்களும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனா்.

ஊடகவியலாளா்கள் கௌரவிப்பு
நியுஸ் வயா் ஸ்தாபகா், வெளிநாட்டு செய்தியாளா் அசாம் அமீன், தினகரன் தினகரன் பிரதம ஆசிரியா் ரீ.செந்தில்வேலவா், வசந்தம்தொலைக்காட்சி உதவி முகாமையாளா் இர்பான் முஹம்மட், பிரதேச பத்திரிகை தொலைக்காட்சி ஊடகவியலாளா் வீடமைப்பு அதிகர சபையின் பொதுசன முகாமையாளா் அஷ்ரப் ஏ சமத், வசந்தம் சிரேஸ்ட செய்தி ஆசிரியா் சித்தீக் ஹனிபா, தினகரன் இணை ஆசிரியா் மர்லின் மரிக்காா், விடிவெள்ளி பிரதி ஆசிரியா் ஏ.ஆர்.எம். பரீல், இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தமிழ் செய்திப் பணிப்பாளா் எம்.எஸ்.எம். சியாம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லிம் சேவையின் பிரதிப் பணிப்பாளா் ஜே.எப் றினோசியா, தினக்குரல் உதவி ஆசிரியா் எம்.எச்.எப் ஹூஸ்னா, வீரகேசரி பத்திரிகையின் உதவி செய்தி ஆசிரியா் ஸ்டீபன், தினகரன் ,தினகரன் வாரமஞ்சரி உதவி செய்தி ஆசிரியா் எம். சிறிங்காந் , ஆகியோா்களும் இந் நிகழ்வில் பிரதம அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :