ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு - மாணவர்களை பாதிக்காது போராட்டம் - அ.ஆ தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்புநோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
நுவரெலியா மாவட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் எதிர்வரூம் திங்கள் முதல் கருப்பு சட்டை அணிந்து அல்லது கருப்பு பட்டி அணிந்து கடமைக்கு செல்ல உள்ளதாக இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர் சங்கரமணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின்
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்மைப்பு இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது...

ஜோசப் ஸ்டாலின் ஆசியர்களுக்கு மட்டுமன்றி பொது மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருபவர் தொழிற்சங்க, உரிமைசார் போராட்டங்களை நசுக்கும் வகையில் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனவே , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அதுவரை மாணவர்களின் நலன் கருதியே கருப்பு சட்டை அணிந்து நுவரெலியா மாவட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் கடமைக்கு செல்ல உள்ளோம் மேலும், ஒரு வாரத்திற்குள் உரிய தீர்வு கிடைக்காவிடின் மேலதிக நடவடிக்கையை எதிர்வரும் வாரத்தில் முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போது.

இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர்.சங்கர் மணிவண்ணன், முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர். வே.தினகரன் , தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலசேகரம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா செயலாளர் இந்திரச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :