மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பெருவிழா 2022 தீமிதிப்பும் அன்னதானத்துடன் இடம்பெற்றது


ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பெருவிழா 2022 உற்சவப் பெருவிழாவானது 22.08.2022 திருக்கதவு திறத்தல் உடன் ஆரம்பமாகி 27.08.2022 பல்லைய சடங்கு, தீர்த்த உற்சவம் மற்றும் அன்னதான நிகழ்வு என்பவற்றுடன் இனிதே நிறைவு பெற்றது.

மேலும் உற்சவ காலத்தில் விசேடமாக முதலாம் நாள் பூசை ஆனது உபயம் திரு திருமதி வசீகரன் ரஜிதா குடும்பத்தினராலும் நடாத்தப்பட்டது. இரண்டாம் நாள் பூசை உபயம்: காலம் சென்ற தம்பிமுத்து தங்கமுத்து அவர்களின் ஞாபகார்த்த அவர்களின் மகள்மார்கலான திருமதி தம்பிமுத்து சாரதா மற்றும் தம்பிமுத்து வசந்தா ஆகியோர்களின் குடும்பத்தினராலும் நடாத்தப்பட்டது.

மூன்றாம் நாள் பூசை ஆனது உபயம் ராஜ்மோகன் பரமேஸ்வரி குடும்பத்தினராலும் நடாத்தப்பட்டது.

நான்காம் நாள் பூசை ஆனது

உபயம்: இந்திரஜோன் ஜமுனா குடும்பத்தினராலும் நடாத்தப்பட்டது.

ஐந்தாம்நாள் பூசை

உபயம்: வேலுப்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக திரு. திருமதி. அலடின் விஜயா குடும்பம் மற்றும் சுதர்சன் விதுஜினி ஆகியோர்களின் குடும்பத்தினராலும் நடாத்தப்பட்டது.

மேலும் 26.08.2022 பக்தி மீது தீ மிதிப்பு வைபவம் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

அன்னதான நிகழ்வு உபயம் :

பிரபாகரன் தேவி குடும்பத்தினர் (சுவிஸ் )

மேலும் இவ்விபத்தில் சிறப்பாக நடத்தி முடிப்பதற்குஎமக்கு சகல வழிகளிலும் ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய அனைவருக்கும் எமது ஆலய பரிபாலன சபையின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் எமது ஆலய கட்டட வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் எனில் கீழ் குறிப்பிடப்பட்ட வங்கி கணக்கு இலக்கத்திற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :