இன்று கதிர்காமத்தில் 10 ஆயிரம் பேருக்கு சித்தர்கள் குரல் அமைப்பின் அன்னதானம்!.காரைதீவு நிருபர் சகா-
சித்தர்கள் குரல் அமைப்பின் பத்தாயிரம் பேருக்கான அன்னதானம் இன்று(4) வியாழக்கிழமை கதிர்காமத்தில் இடம்பெற்றுள்ளது.

பத்தாயிரம் பேருக்கான இந்த அன்னதானத்தை சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஸ்ரீ சிவசங்கர் ஜி தலைமையில் அங்கு நடத்தினார்கள்.

சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் ,துணைத் தலைவர் மனோகரன், ஸ்தாபக தலைவர் சங்கர் ஜி அவர்களின் நிதி உதவியோடு மற்றும் மகேஸ்வரன், தியாகராஜா, ரினோன், விவே ,சில்வா ஆகியோரின் துணையுடன் அங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

கதிர்காம பஸ்நாயக்க நிலமே அனுமதியோடு , வரலாற்றின் முதல் தடவையாக கதிர்காம ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான மண்டபத்தில் சித்தர்கள் அமைப்பு பத்தாயிரம் பேருக்கு வழங்கி வைத்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :