ஐந்து மோட்டார் சைக்கிள்களை துவம்சம் செய்த யானைகள் ! பெட்ரோல் வரிசையில் வைக்கப்பட்டிருந்த போது வெல்லாவெளியில் சம்பவம் !வி.ரி சகாதேவராஜா-
பெட்ரோல் பெறுவதற்காக வரிசையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிளை வழியால் வந்து யானைகள் அடித்து, நொறுக்கி துவம்சம் செய்திருக்கின்றன.
இந்த சம்பவம் நேற்று(29) வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வெல்லாவெளி பிரிவில் இடம் பெற்றிருக்கின்றது.

வெல்லாவெளி எரிபொருள் நிரப்புநிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக 500க்கும் மேற்பட்ட மோட்டர் சைக்கிள் ,கார்கள், ஆட்டோக்கள் என வாகனங்கள் பெற்றோலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் பிரதான வீதியை குறுக் கறுத்த யானைகள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி மிதித்து சென்றன.

அச்சமயம் அங்கு நின்ற வாகன உரிமையாளர்கள் யானைகளைகண்டு ஓடினர்.காலையில் ஏனையவர்கள் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு சேதமாக்கப்பட்டு காணப்பட்டன.

வெல்லாவெளி போலீஸ் பிரிவு உட்பட்ட காக்காச்சிவட்டை ஏனும் பின்தங்கிய கிராம விவசாயிகளின் மோட்டார் சைக்கிள்களே அவை என்று அங்கு வரிசையில் நின்ற ஆசிரிய ஆலோசகர் எஸ்.அற்புதராஜா தெரிவித்தார்.
மழைக்கு மத்தியிலே இந்த யானையின் அட்டகாசமும் அதிகரித்திருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :