கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மரணடைந்த நபர், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட தழும்புகளுடன்..J.f.காமிலா பேகம்-
ந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் மரணடைந்த நபர், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட தழும்புகளுடன் கூடிய காயங்களால் மரணமடைந்துள்ளதாக மரணவிசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29 திகதி கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் நபர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்ததை அடுத்து, கைதிகள் கலவரமடைந்து தப்பிச்செல்ல முயற்சி செய்தனர்.

மரணமடைந்த குறித்த நபர் சம்பந்தமாக அங்கிருந்த கைதிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், அதிகமானோர் வெளியேறினர்.குறித்த முகாமில் மரணமடைந் நபரின் மரணம் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் கைதிகள் சமூக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

இச்சம்பவத்தையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில், வெலிகந்தை பொலிசார் கடந்த முதலாம் திகதி விமானப்படைவீரர் இருவர் மற்றும் ராணுவ வீரர் இருவர் என நால்வரை கைது செய்தனர்.இவர்களை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இக்குறித்த முகாமின் கைதிகளை தாக்குவற்காக பயன்டுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், வயர் மற்றும் உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :