ரணில் விவகாரம்: சாகர எம்.பிக்கு பீரிஸ் கடிதம்!



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்துக்கு கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கவுள்ளதாக சாகர எம்.பி அறிவித்தமை தொடர்பில் விளக்கமளிக்குமாறே குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது குறித்த தீர்மானம் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றும் இந்த தீர்மானம் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்றும் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட திகதி, நேரம், இடம் மற்றும் தீர்மானம் எடுத்த போது உடன் இருந்தவர்கள், எந்த அதிகாரத்தின் கீழ் தீர்மானம் எடுக்கப்பட்டது ஆகிய கேள்விகளை ஜீ.எல்.பீரிஸ் எழுப்பியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :