தேசிய அமைப்புக்களின் வாழ்த்து செய்தி





பொருளாத நெருக்கடிகள் தீர்ந்த, நிலையான உறுதியான அரசாங்கம் அமைய பிராத்திப்போம்


நூருல் ஹுதா உமர்-
தீயன தடுத்து நல்லன ஏவும் புனிதமிகு இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாம் கடமையை நிறைவேற்றி உலகம் பூராகவும் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் சகல முஸ்லிங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் இலங்கை வாழ் சகல இலங்கையர்களுக்கு நிம்மதியான வாழ்வும், பிரச்சினைகள் இல்லாத நாடும் மலர புனித ஹஜ்ஜுப்பெருநாளில் பிராத்திக்கிறோம்.

இனவாத, மதவாத, அரசியல் இலாபங்களுக்காக சீரழிந்து இருக்கும் இலங்கை தீவில் நிம்மதி மலர இலங்கையர்கள் அனைவரும் பேதங்கள் துறந்து ஒற்றுமைப்பட்டு இஸ்லாம் கூறும் சமத்துவம், சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவத்தை பேணி நாட்டை கட்டியெழுப்ப முன்வருவோம். நபி இப்றாஹீம் (அலை) அவர்களினதும், அவர்களது குடும்பத்தினதும் தியாகங்களை நினைவு கூரும் வகையில் உலக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் இப்புனித ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் இப்பெருநாளை பல்வேறு நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் கொண்டாடும் இலங்கை முஸ்லிங்கள் படிப்பினையாக கொண்டு நடப்பதன் மூலம் எதிர்காலம் சிறக்கும் என நம்புகின்றோம்.

பொருளாத நெருக்கடிகள் தீர்ந்த, நிலையான உறுதியான அரசாங்கம் அமைய பிராத்திப்பதுடன் இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எங்களின் மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அல்- மீஸான் பௌண்டஷன்
ஸ்ரீலங்கா.


------------------------------------------------------------------------------------------------

நீதியும் நேர்மையும் மிக்கதோர் ஆட்சி மலர்வதற்கும், நாடு பொருளாதார ரீதியாக மீள கட்டியமைக்கப்படவும் நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்

பி இப்றாஹீம் (அலை) அவர்களினதும், அவர்களது குடும்பத்தினதும் தியாகங்களை நினைவு கூரும் வகையில் உலக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் இப்புனித ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் இப்பெருநாளை பல்வேறு நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் கொழும்பு மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றியம் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கடந்த காலங்களில் அரசியல் இலாபங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இனவாத செயற்பாடுகள், ஒருதலை பட்ச நடவடிக்கைகள் காரணமாக இலங்கையில் இன்று நாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில் இந்நாட்டு மக்கள் பல்வேறு சவால்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் எவ்வித பாகுபாடுகளுமின்றி எதிர்கொண்டுள்ளதனை நாம் எல்லோரும் அறிவோம்.

முஸ்லிம் சகோதரர்களும் பல கோடிக்கணக்கான இலங்கையர்களும் இன்னமும் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியமல் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்தான் நாம் இன்று ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறே நாட்டில் மத ரீதியான அச்சுறுத்தல்களாலும், பாகுபாடுகளாலும் நாளுக்கு நாள் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கு மத்தியில் அச்ச நிலைமை அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலில்தான் நாம் இன்று இப்பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

அத்துடன் சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான பல்வேறு சதி நடவடிக்கைகள் இஸ்லாமிய விரோத சக்திகளால் இன்று முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் அறிவோம். குறிப்பாக பெருமானார் (ஸல்) அவர்கள் மீது மாசு கற்பிக்கும் பிரச்சாரங்கள், பலஸ்தீன் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவை உலகளாவிய முஸ்லிம் உம்மாவை கவலையுறச் செய்துள்ளன.

எனவே புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இந்நாளில் நாட்டில் இனங்களுக்கிடையில் பரஸ்பரம் புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்படுவதற்கும், சட்டமும் ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படுவதற்கும், நீதியும் நேர்மையும் மிக்கதோர் ஆட்சி மலர்வதற்கும், நாடு பொருளாதார ரீதியாக மீள கட்டியமைக்கப்படவும் நாம் எல்லோரும் பிரார்த்திப்போம். உலக முஸ்லிங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் நீங்க எல்லோரும் இந்த புனித பெருநாளில் பிராத்திப்போம்.


கொழும்பு மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றியம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :