முதலாளித்துவத்தையும், மேட்டுக்குடியையும் அகற்றி இடதுசாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கினால் ?



சுதந்திரம் அடைந்ததிலிருந்து எமது நாட்டை இரு பிரதான கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்தாலும், அவர்கள் அனைவரும் முதலாளித்துவவாதிகளும், சிங்கள மேட்டுக்குடி வர்க்கத்தினர்களுமாகும். இவர்கள் ஒருபோதும் நாட்டை முன்னேற்றும் நடவடிக்கைகளில் உளப்பூர்வமாக ஈடுபட்டதில்லை.

மக்களிடம் தேசப் பற்றாளர்களாகவும், நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பயனிப்பவர்களாகவும் போலி வேஷமிட்டுக்கொண்டு நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து சூரையாடிய வரலாறுகளே காணப்படுகின்றது.

புலிகளுடனான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் ஆயுதக் கொள்வனவில் ஊழல் செய்தார்கள். யுத்தம் முடிவுற்றதன் பின்பு திட்டமிடப்படாத அபிவிருத்தி மூலமாக பாரிய மோசடிகளை செய்து நாட்டை சூரையாடினார்கள்.

இந்த கொள்ளைக்கார முதலாளித்துவ வாதிகளுக்கும், உயர் வர்க்கத்தினர்களுக்கும் முடிவு கட்டுவதற்கான சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வதென்றால் முதலில் மக்களை ஏமாற்றிக்கொண்டு அரச வழங்களை சுரண்டி அபிவிருத்தி என்ற போர்வையில் கொள்ளையடித்து ஏப்பமிடுகின்றவர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும்.

அவ்வாறு மீட்டெடுத்து இடதுசாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கும்பொருட்டு சில காலம் இடதுசாரிகளின் கைகளில் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அதற்காகத்தான் தற்போது நாட்டில் மக்கள் எழுட்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தொடர்ந்து முதலாளித்துவ மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினர்களின் கைகளில் ஆட்சி இருக்கும் வரைக்கும் இந்த நாட்டின் பொருளாதாரம் மேலோங்கப்போவதுமில்லை, நாடு அபிவிருத்தி அடையப்போவதுமில்லை.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :