சமுர்த்தித் அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் தேசிய உப உணவுப் பயிர்ச் செய்கைத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் நேற்று (06) இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் அல்-ஹாஜ் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது மரவள்ளி உள்ளிட்ட மரக்கறி பயிர்கள் அதிதிகளினால் நடுகை செய்யப்பட்டது.
இதில் சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவ பணிப்பாளர் யூ.எல்.எஸ்.ஜூனைதா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஏ. கபூர், சமுர்த்தி கருத்திட்ட உதவி முகாமையாளர் எம்.எம்.எம்.முபாறக், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். றிகாஷா ஷர்பீன் உள்ளிட்ட கமநல சேவைகள் மத்திய நிலைய உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை தவிர்க்குமுகமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இத்திட்டத்தினை தேசிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment