எரிபொருள் தட்டுப்பாடு ராஜதந்திர நெருக்கடியாக மாறும் அபாயம்!



அஷ்ரப் அலீ-
லங்கையில் செயற்படும் ஏராளமான வௌிநாட்டு தூதுவராலயங்கள் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு நாட்டை விட்டு வௌியேறும் தீர்மானத்தை நோக்கி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.
இலங்கையில் நிலவும் தீவிர எரிபொருள் பற்றாக்குறையே அதற்கான காரணமாகும்.
வியன்னா ஒப்பந்தத்தின் பிரகாரம் எந்தவொரு நாடும் அந்த நாட்டினுள் செயற்படும் வௌிநாட்டுத் தூதராலயங்கள் செயற்படுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பது கட்டாயமாகும். அந்தந்த நாடுகளின் வௌிநாட்டலுவல்கள் அமைச்சின் கடமைகளில் அதுவும் ஒன்றாகும்.
ஆனால் இலங்கையில் செயற்படும் ஏராளம் வௌிநாட்டு தூதரகங்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தங்கள் வழக்கமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சிக்கல் காரணமாக ஊழியர்களும் கடமைக்குச் சமூகமளிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது
ஆனால் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு இந்த விடயத்தில் எந்தவித தலையீட்டையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே வியன்னா ஒப்பந்தத்தைத் இலங்கை மீறியுள்ளதாக தெரிவித்து பல தூதரகங்கள் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு வௌியேறும் முடிவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு வியன்னா ஒப்பந்தம் மீறப்படல் எனும் குற்றச்சாட்டை இலங்கை எதிர்கொண்டால் சர்வதேச ரீதியாக பாரிய பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்வதுடன், சர்வதேச ரீதியாக தனிமைப்படவும் நேரிடும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :