முஸ்லிங்களின் பிரச்சினையை தீர்க்க சிறந்த வாய்ப்பாக இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் : முஸ்லிம் எம்.பிக்களுக்கு கோரிக்கை !நூருல் ஹுதா உமர்-
லங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்த எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சிகளின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்துவைத்தும் சக்தியும், ஆளுமையும், எண்ணமும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க முன்வர வேண்டும் என சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது.

அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா விடுத்துள்ள அறிக்கையில் மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி போன்ற தமிழ் மக்களின் சக்திமிக்க அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் செய்துவரும் நிலையில் முஸ்லிம் கட்சிகள் வழமை போன்று கண்களை மூடிக்கொண்டு வாசிக்கு வலைவீசாமல் நிதானித்து முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர ஆராய்ந்து முடிவெடுக்க சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாக இந்த சூழ்நிலையை அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறோம்.

முஸ்லிம் சமூகத்தின் காணி மற்றும் நிலப்பிரச்சினைகள், பிராந்திய பிரச்சினைகள், உரிமை சார்ந்த விடயங்கள் என இலங்கையின் சகல பாகங்களிலும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கிறது. அவற்றை பட்டியலிட்டு அந்த பிரச்சினைகளை எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்து வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கின்ற, முஸ்லிங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆற்றலும், எண்ணமும் உள்ள வேட்பாளர்களை அணுகி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை முன்னுதாரணமாக கொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :