நீண்ட நாட்களின் பின்னர் சாய்ந்தமருதில் கேஸ் விநியோகம் மகிழ்ச்சியில் மக்கள்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருதில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பொதுமக்களின் பாவனைக்காக சமையல் எரிவாயு விநியோகம் இன்று (20) புதன்கிழமை காலை சுமூகமாக இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடும் நாட்டு மக்களும் சிக்கித் தவிர்க்கும் இச் சந்தர்ப்பத்தில், சாய்ந்தமருதில் சமையல் எரிவாயுவைப் பெற முடியாது நீண்ட காலமாக துன்பப்பட்டுக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் முறையான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவு வாயிலாக கிராம அதிகாரி மூலம் வழங்கப்பட்ட அட்டை முறையின் அடிப்படையில் எரிவாயு விநியோகம் இடம்பெற்றது. இந்த முறையின் மூலம் சுமூகமான முறையில் கேஸ் விநியோகம் இடம்பெற்றதனால், இந்த அட்டை முறை வெற்றியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 800க்கு மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று சாய்ந்தமருதில் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, 12.5 கிலோகிராம் கேஸ் சிலிண்டர் ரூபா 5263 க்கும், 5 கிலோகிராம் ரூபா 2184 க்கும், 2.5 கிலோகிராம் ரூபா 1092 க்கும் விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு முதல் வெற்று சிலிண்டர்களை வரிசையாய் அடுக்கி வைத்து, சமையல் எரிவாயுவைப் பெறுவதற்காக ஆண்களும் பெண்களும் என மிகவும் மும்முரமாகவும் ஆர்வத்துடனும் ஈடுபாடு காட்டியமையைக் காணக்கூடியதாக இருந்தது.
அத்தோடு, எரிபொருள் தாகம் ஓரளவு தீர்ந்ததையும், மக்கள் முகத்தில் மகிழ்ச்சியையும் காணக்கூடியதாகவும் இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :