கடற்றொழில் வள அமைச்சுக்கு மேலதிகமாக இன்னும் ஒரு அமைச்சு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர் தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுகத்தின் மீள் செயற்பாடுகள் வியாழக்கிழமை காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அத்துடன் அஷ்ரப் ஞாபகார்த்த துறைமுகம் என்று துறைமுகத்துக்கு புதிய பெயர் சூட்டப்பட்டு, அதற்கான கல் தூண் பொறிக்கப்பட்டு திரை நீக்கம் செய்யப்பட்டது.
இவ்வைபவத்தில் பௌத்த சமய அதிதியாக கலந்து கொண்டு பேசியபோது தேரர் மேலும் தெரிவித்தவை வருமாறு
புதிதாக வந்திருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.
அவ்வாறு சந்தர்ப்பம் வழங்காமல் தொடர்ந்தும் போராடி கொண்டிருப்பதால் எந்த பயனும் கிடையாது. இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என நம்ப வேண்டும்.
சமையல் எரிவாயுவுக்கான பிரச்சினையை தீர்த்து தந்து உள்ளனர். அதே போல எரிபொருட்களுக்கான பிரச்சினையும் விரைவில் தீர்க்கப்பட்டும் என நம்புகின்றேன்.
அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தர தவறுகின்ற பட்சத்தில் நாம் பரிய போராட்டத்தை முன்னெடுக்க முடியும். ஆனால் அதற்கு இப்போது அவசியம் கிடையாது.
கடந்த பல வருடங்களாக தொடர்ந்து இயங்காமல் கிடந்த ஒலுவில் துறைமுகத்தை மீள் இயங்க செய்து தந்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், ஜனாதிபதி ரணில் வ்விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
ஒலுவில் துறைமுகத்தை மீள் இயங்க செய்து தந்திருப்பதன் மூலம் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியன செழிப்பதற்கு வழி ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது.
கடற்றொழில் வள அமைச்சராக டக்ளஸ் பதவ்வி வகிப்பது பெருமகிழ்ச்சி தருகிறது. அவரும் பெருமகிழ்ச்சியுடன் மீனவ உறவுகளை வாழ வைத்து வருகின்றார்.
எமது விருப்பம் என்னவென்றால் கடற்றொழில் வள அமைச்சுக்கு மேலதிகமாக இன்னுமொரு அமைச்சும் அவருக்கு நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.
0 comments :
Post a Comment