கல்முனை மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளிவாசலின் கட்டிட நிர்மாணத்துக்கு ரஹ்மத்பவுண்டேஷனினால் காசோலை வழங்கிவைப்பு ..!எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை அல்மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளிவாசலின் மூன்றாம் மாடி பகுதியினை (கட்டிடம்) பூரணப்படுத்து
வதற்கான நிதி உதவியாக ரூபா பத்து இலட்சம் காசோலை ரஹ்மத் பவுண்டேஷன் மூலம் வழங்கிவைக்கப்பட்டது

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் குறித்த மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளிவாசலினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு இப்பள்ளிவாசலின் மூன்றாம் மாடி பகுதியினை (கட்டிடம்)பூரணப்படுத்துவதற்கான நிதி உதவியாக ரூபா பத்து இலட்சம் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.அப்துல் மஜீட், பொருலாளர் எம்.ஜமால்டீன் உதவிச் செயலாளர் எம்.பெறோஸ் மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர்கள், எஸ்எல்.எம்.ஜெஸீல்,பொது மக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் ரஹ்மத் மன்சூர் அவர்கள் உரையாற்றுகையில் இப்பள்ளியின் மூன்றாம் மாடி கட்டிடத்தினை பூரணப்படுத்துவதற்காக பெரிதும் பங்ககளிப்புச் செய்துவரும் Y.W.M.A. பேரவைக்கு தனது ஊர்மக்கள் சார்பாக தனது விஷேட நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :