"வாழ்வில் வசந்தம்" 7வது பகுதி அளவான வீடு இன்று கையளிப்பு !!நூருல் ஹுதா உமர்-
ம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "வாழ்வில் வசந்தம்" கிராமிய எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் வீடற்றோருக்கான பகுதி அளவான வீட்டை நிர்மாணித்து கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது
பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, உப தலைவரும் சாய்ந்தமருது சம்பத் வங்கியின் முகாமையாளருமான ஏ எம் எம் ரியாஸ், பொருளாளர் எஸ் ஏ பாஸித், சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் நிதி உதவியாளர் எஸ் எம் எம் அன்வர் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயனாளிக்கு வீட்டை கையளித்து வைத்தனர்

நிந்தவூரை சேர்ந்த புகழ்பெற்ற கல்விமான் மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் பங்களிப்புடன் நிந்தவூர்-22 ஆம் பிரிவில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வீட்டு வசதி இல்லாத பெண் தலைமை தாங்கும் குடும்பத்தை சேர்ந்த பயனாளி ஒருவருக்கே இந்த பகுதி அளவான வீடு நிர்மாணித்து வழங்கப்பட்டது

இதன் மூலம் வாழ்வதற்கு ஓரளவேனும் வசதியான வீடின்றி கஷ்டப்பட்ட ஒரு ஏழைக் குடும்பத்தின் கண்ணீர் கதையை பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் ஏற்பாட்டில் மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் மூலம் துடைத்து வைக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும் என பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது இந்நிகழ்வின் போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :