பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் திருகோணமலை மாவட்ட பெட்மிண்டன் சங்கத்துடன் இணைந்து போட்டி



அஷ்ரப் ஏ சமத்-
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் திருகோணமலை மாவட்ட பெட்மிண்டன் சங்கத்துடன் இணைந்து 2022 ஜூன் 18 முதல் 19 வரை திருகோணமலை ஹெய்சர் விளையாட்டரங்கில் பெட்மிண்டன் போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

போட்டியில் பல்வேறு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் தங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொணர இப் போட்டி சிறந்த வாய்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கும் பரிசில்களை வழங்கி வைத்தார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் துணை உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில்,

போட்டியை ஒருங்கிணைத்த திருகோணமலை மாவட்ட பெட்மிண்டன் சங்கத்திற்கும் ஆளுநருக்கும் நன்றி தெரிவித்த தோடு, பாகிஸ்தானும் இலங்கையும் விளையாட்டினை தீவிர நேசிக்கும் இரு நாடுகளாகும். மேலும் இலங்கையர்களையும் பாகிஸ்தானியர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக விளையாட்டு காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாகிஸ்தானைப் போலவே இலங்கையும் விளையாட்டை விரும்பும் ஒரு நாடு என்றும், இளைஞர்களின் விளையாட்டு மீதான ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் இலங்கை பாடசாலை முறைமை மிகவும் கரிசனையுடன் செயற்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இப் போட்டியானது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும் ஒரு அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :