கலாநிதி எஸ்.எம். அய்யூப் சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு!அஸ்றஜ் றஸாக்-
லாநிதி எஸ்.எம். அய்யூப் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு ஒலுவில் மண் கொடுத்த சொத்து. இவர் ஆரம்ப கல்வியை ஒலுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலையில் கற்று, பின் பேருவளை ஜாமியா நளீமியாவுக்குச் சென்று அங்கிருந்த காலத்திலேயே உயர்தரப் பரீட்சை எழுதி (1997) அம்பாறை மாவட்டத்தில் முதல் மாணவராக (1st Rank-340) தெரிவானார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியலை விசேட கற்கையாக தெரிவு செய்து முதல் சித்தியையும் (1st class) பெற்று சமூகவியலில் சிறந்த மாணவருக்கான (Best student in sociology) இப்னு கல்தூன் விருதையும் பெற்றுக்கொண்டார். தனது முதுமானிப் பட்டத்தினைப் (M.phil) பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பொதுநலவாய புலமைப்பரிசில் மூலம் இந்தியாவுக்கு சென்று கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

பிரட்பேரட் பல்கலைரக்கழகத்தில் (University of Bradford) பட்டப்பின்படிப்பு டிப்ளமாவையும் பெற்றுக்கொண்டார். தற்பொழுது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையின் துறை தலைவராகவும் கடமையாற்றுகின்றார்.
இந்தியா, எகிப்து, மலேசியா போன்ற நாடுகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கின்றார். சமூகவியல் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் சில பாடப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது விரிவுரைகளுக்கு மாணவர்கள் ஆர்வத்தோடு செல்வது பலராலும் சுட்டிக்காடும் ஒரு விடயமாகும். அவருடைய சொற்கள் கேட்போரை சுண்டியிழுக்கும் தன்மை கொண்டவை. விரிவுரையின்போது மொழியும், இலக்கியமும் தகவலும், நகைச்சுவையும், குட்டிக் கதைகள் மடைதிறந்து பாய்ந்து ஓடும். புலமை மரபிற்கு அப்பாலும் 40க்கும் மேற்பட்ட நகைச்சுவை பட்டிமன்றங்களிலும் விவாதங்களிலும் பங்கெடுத்தவர். படிக்கும் காலத்திலேயே தென்கிழக்கு பல்கலைக்கழகம் சார்பாக பல்கலைக்கழகம் மட்ட விவாத அரங்கிற்கு சென்று வெற்றியோடு திரும்பியவர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், கவிதைத் தொகுதிகளையும் தந்தவர். இலக்கிய விமர்சகர், பாடலாசிரியர், சிறந்த கதைசொல்லி, ஓவியர். பல்கலைக்கழகம் மட்ட ஓவியப் போட்டிகளில் பரிசு வென்றார். இந்தியாவில் தமிழ்நாட்டு பல்கலைக் கழகத்திற்கு இடையே நடைபெற்ற தொடர் சுற்றுப் பேச்சு போட்டிகள் ஒவ்வொன்றிலும் பரிசு பெற்றவராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :