கத்தார் மண்ணில் "தமிழ்மகன் விருது-2022" இல் "இணைய தமிழன்" விருது வென்றார் ஜனூஸ் சம்சுதீன்..!



நயீம் அஹமட்-
த்தார் மண்ணில் அல்-அரப் உள்ளக கலையரங்கில் நேற்று(24.06.2022) இடம்பெற்ற பல்வேறு துறைகளில் கனதியான சாதனை படைத்த ஆளுமை மிக்க சான்றோரை பாராட்டும்"தமிழ்மகன் விருது-2022" விழாவின் போது இணைய வெளி நவீன சமூக ஊடக பரப்பில் ஆக்கபூர்வமான திறன்களை வெளிப்படுத்தியமைக்காக"இணைய தமிழன்" விருதினை பெற்றார் வியூகம் ஊடக வலையமைப்பின் பிரதானியும், இலங்கையின் தேசிய வானொலி மற்றும் தேசிய தொலைக்காட்சியின் அறிவிப்பாளரும்,கவிஞருமான ஜனூஸ் சம்சுதீன் அவர்கள். சர்வதேச மட்டத்தில் கீர்த்தி பெற்றிருக்கும் இனிய ஊடக தோழமை ஜனூஸ் சம்சுதீன் அவர்களுக்கு எமது இதயமார்ந்த
வாழ்த்துக்கள்
..!
கத்தாரில் அல் அரப் ஸ்டேடியத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்ற இவ்விருது விழாவில் கத்தார் வாழ் அரபுலக பிரமுகர்கள், தென்னிந்திய சினிமா கலை நட்சத்திரங்கள், பல்துறை சார் ஆளுமைகள், கத்தார் வாழ் புலம்பெயர் மக்கள் என பெரும் திரளானோர் கலந்து சிறப்பித்தனர். ஜனூஸ் சம்சுதீன் இலங்கையின், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது எனும் ஊரில் பிறந்தார்.
*ஜனூஸ் சம்சுதீன்* இலங்கையின் தேசிய வானொலியாம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், மற்றும் தேசிய தொலைக்காட்சியாம் ரூபவாஹினி நேத்ரா டீவியின் பகுதி நேர அறிவிப்பாளர். மேலும், கவிஞர்,எழுத்தாளர், இயக்குனர், நடிகர், சுயாதீன ஊடகவியலாளர், சமூக ஊடக செயல்பாட்டாளர் என பல்வேறு தளங்களில்,களங்களில் தொடர்ச்சியாக இயங்கி கொண்டிருப்பவர். "தாக்கத்தி" மற்றும் "மூசாப்பும் ஒரு முழ வெயிலும்" என இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
*இணைய, சமூக ஊடக அன்பர்களை கருத்திற் கொண்டு "குரலாகி" எனும் பெயரில் கவிதை ஒலி ஒளி இறுவட்டினை வெளியிட்டுள்ளார்.
# மிக இளம் வயதில் கலை,இலக்கியம்,ஊடகம், சமூக சார்ந்த செயற்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டு உழைத்துக் கொண்டிருப்பவர்.
#இலங்கையின் சமூக ஊடக செயற்பாடுகளில் யாரும் வெளிப்படுத்தாத காத்திரமான சமூக ஊடக புரட்சியினை ஏற்படுத்தியவர்.
# 2016 ஆம் ஆண்டில் முகநூல் தளத்தில் குரலற்ற மக்களின் குரல் எனும் மகுட வாசகத்தில் *வியூகம் TV* எனும் பெயரில் ஒரு முகநூல் தொலைக்காட்சியினை நிறுவி, அதனூடாக சமூக ஊடக பரப்பில் புத்தெழுச்சியான ஊடக கலாசாரத்தினை தோற்றுவித்தவர். இவரின் முதன் முதலான- முன் மாதிரியான சமூக ஊடக பயணத்தின் எழுச்சியில் ஈர்க்கப்பட்டு தற்போது இலங்கையில் பல சமூக ஊடக சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
*வியூகம்* இலங்கையில் மாத்திரம் அல்ல சர்வதேசங்களிலும் மக்களால் அதிகம் விரும்பப்படும் ஓர் சமூக ஊடகமாய் திகழ்கிறது. சர்வதேசம் எங்கும் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் உறவுகள் வியூகம் முகநூல் நேரலை தொலைக்காட்சியினை பின் தொடர்ந்து வருகின்றனர்.
*வியூகம்* இலங்கையின் அரச உயர் தலைவர் முதல்-அடித்தட்டு பாமர மகன் வரை நேர்காணல்களை செய்துள்ளது.
# அரசியல், கல்வி, சமூகம், சமயம், கலை, இலக்கியம், மக்களின் பிரச்சினைகள், தீர்வுகள் என பல்வேறு தலைப்புகளில் இது வரை ஆயிரக்கணக்கான காணொளி நிகழ்ச்சிகளை படைத்துள்ளது.
# குறிப்பாக தேசிய ஊடகங்களில் வெளிக்கொணரப்படாத வெகு மக்களின் பிரச்சினைகள், எளிய மக்களின் உள்ளத்து உணர்வுகள், சமுதாயம் சார் எதிர்பார்ப்புகளை சர்வதேசம் எங்கும் வெளிச்சம் போட்டு காட்டியதில் வியூகம் ஊடகத்தின் பங்களிப்பு கனதியானது.
# ஏனைய ஊடகங்கள் தொடத் தயங்கிய நூற்றுக்கணக்கான பொதுச் சமூகத்தின் அவலங்களை வியூகம் ஊடகமயப்படுத்தி இருக்கிறது.
*இலங்கையில் மாத்திரம் முடங்கி விடாமல் வெளிநாடுகளுக்கும் சென்று வியூகம் தனது சமூக ஊடக பயணத்தினை விஸ்தரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா, கத்தார், துபாய் போன்ற தேசங்களுக்கு ஜனூஸ் சம்சுதீன் தலைமையிலான வியூகம் குழுமத்தினர் பயணித்து அங்கிருந்து பற்பல சமூக பெறுமானம் மிக்க நிகழ்ச்சிகள், வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
* உலகத்தினை உள்ளங்கையில் உள்ளடக்கும் இணையத்தினையும், நவீன ஊடக செல்நெறிகளையும் தேசம் தழுவிய தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டு சேர்த்ததில் ஜனூஸ் சம்சுதீன் வகிபாகமும் குறிப்பிடத்தக்கது.
* Mojo எனப்படும் குறுகிய தொழில் நுட்ப வளங்களை கொண்டதான தனது ஊடக நகர்வுகளின் ஊடாக பாரிய சமூக மாற்றங்களை ஜனூஸ் சம்சுதீன் நிகழ்த்தி காட்டியுள்ளார்.
*தேசிய ஊடகங்கள், சமூக மற்றும் இணைய ஊடகங்கள் மூலமாக தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஜனூஸ் சம்சுதீன் தன்னால் இயன்ற பங்களிப்பினை நல்கி கொண்டிருக்கின்றார்.
*அதன் பொருட்டு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இவர் பல்வேறு விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள், சான்றோரின் வாழ்த்துரைகள் பெற்றுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :